புறா, குதிரை, அரியணை
அது ஒரு
கோடைக்காலம். மிகச் சரியாகச் சொல்வதென்றால் 1542, மே.
கொளுத்தும்
வெயிலில் பயணம் செய்வதென்பது எவ்வளவு கொடுமையான விஷயம். அதுவும் பாலைவனப் பயணம்
என்றால், கேட்க வேண்டுமா? கண்ணுக்கெட்டிய
தூரம் வரை எந்தக் கட்டடமோ, மக்களோ தென்படவில்லை.
ஆங்காங்கே இருந்த
கிணறுகளில் மணல்தான் நிரம்பியிருந்தது. கானல் நீரின் காட்சிகள் கண்களை ஏமாற்றின.
ஹமீதா மிகவும்
களைத்துப் போயிருந்தாள். பதினைந்து வயதுப் பெண் அவள். எட்டு மாத கர்ப்பிணி. வெயில்
தாங்காமல் அவளது குதிரை வேறு இறந்துபோய் விட்டது.
4
ஹுமாயூனும்
சோர்ந்துதான் இருந்தார். இறந்த குதிரையை அப்படியே விட்டுவிட்டு தன் மனைவி ஹமீதாவை
ஓர் ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டார். தானும் ஏறிக் கொண்டார். பயணம் தொடர்ந்தது.
அவரது
படைகள்
பின்தொடர்ந்தன.
மீண்டும் ஆக்ரா நகரைக்
கைப்பற்ற முடியுமா என்ற சிந்தனைதான் ஹுமாயூனின் மனத்தினுள் ஓடிக்கொண்டிருந்தது.
ஆம், முகலாயப்
பேரரசர்தான். ஆனால் அப்போது ஹுமாயூன் பெயருக்குத்தான் பேரரசரே தவிர அவரது
ஆட்சிக்குரிய பகுதிகளையெல்லாம் ஷேர் ஷாவிடம் இழந்திருந்தார்.
ஆம், ஷேர் ஷாதான்
ஹுமாயூனுக்கு அப்போது இருந்த ஒரே எதிரி. ஷேர் ஷாவின் பூர்வீகம் ஆப்கன். முகலாயப்
பேரரசர் பாபரிடம் கவர்னராகப் பணியாற்றியவர். பின் அவரிடமிருந்து விலகி பிகாரின்
ஆட்சியாளர் ஆனார். கொஞ்சம் கொஞ்சமாகத் தன் படைபலத்தை அதிகரித்த
ஷேர் ஷா, வங்காளத்தைக்
கைப்பற்றினார்.
பாபருக்குப் பின்
அரசராக முடிசூட்டிக் கொண்ட ஹுமாயூனால், ஷேர் ஷாவின் அசுர வளர்ச்சியை எந்தவிதத்திலும்
கட்டுப்படுத்த முடியவில்லை.
1539ல் சாவ்ஸா (Chausa) என்ற இடத்திலும், 1540ல் கன்னாஜ் (Kannauj) என்ற இடத்திலும் ஷேர் ஷாவுடன் மோதிய ஹுமாயூன்
தோற்றுப் போனார். அதன்பின் ஷேர் ஷா டெல்லியைக் கைப்பற்றினார்.
5
ஜோத்பூரை ஆண்ட
மகாராஜாராவ் மால்தியோ ரதோர் (Rao
Maldeo Rathore), ஷேர் ஷாவை எதிர்த்துப் போரிடலாம் என்று
ஹுமாயூனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ரதோரின்
வார்த்தைகளை நம்பி, அவரைக் காண இப்படி ஒரு பாலைவனப் பயணம்
மேற்கொண்டிருந்தார் ஹுமாயூன்.
பாலைவனத்தைக்
கடந்த ஹுமாயூன், உமர்கோட் என்ற சிறிய நகரத்தை அடைந்தார். அதற்குள் மகாராஜா ரதோர்
உடனிருந்தவர்கள், ஹுமாயூன் பற்றிய பொய்யான தகவல்களைக் கூறி, அவரது மனத்தை மாற்றிவிட்டனர். அதனால்
ஹுமாயூனுக்கு ரதோரின் உதவி கிடைக்காமல் போனது.
ஹமீதாவுக்குப்
பிரசவ வலி ஏற்பட்டது. ஹுமாயூனுக்கு ஒரு மகன் பிறந்தான் (1542,
அக்டோபர் 15). அவருக்கு
வைக்கப்பட்ட பெயர், ஜலாலுதின் முகம்மது அக்பர்.
அடுத்த
காட்சிக்குப் போகும்முன் யார் இந்த முகலாயர்கள் என்று பார்த்துவிடுவோம்.
முகலாயர்கள்
மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கானின் வழியில் வந்தவர்கள். பாரசீகம் (Persia) இவர்களது
பூர்வீகம்.
முகல் என்றால்
பாரசீக மொழியில் மங்கோலியர் என்று அர்த்தம். முகலாயர்கள் இஸ்லாம் சமயத்தைச்
சேர்ந்தவர்கள்.
6
திமுரிட் பேரரசை
(மத்திய ஆசியா, இரான், மெசபடோமியா, ஆப்கனிஸ்தானின் பல பகுதிகளை உள்ளடக்கியது.) ஆண்டு வந்த மன்னரான பாபர், இந்தியா மீது
படையெடுத்தார்.
1526ல் பானிபட் என்ற இடத்தில், டெல்லியின் கடைசி சுல்தானான இப்ராஹிடிம்
லோடியைத் தோற்கடித்தார். இந்த முதலாம் பானிபட் போர் மூலம் டெல்லி பாபர் வசமானது.
அதிலிருந்து
இந்தியாவில் முகலாயர்களின் சாம்ராஜ்யம்
ஆரம்பமானது.
இனி அக்பரின்
கதைக்கு வருவோம்.
தன் குழந்தை
அக்பரைத் தூக்கிக் கொண்டு, ஹுமாயூன் ஊர் ஊராக நாடோடியாகத் திரிந்து
கொண்டிருந்தார். எல்லாம் ஷேர் ஷாவை எதிர்த்துப் படை திரட்டும் முயற்சிக்காகத்தான்.
அப்போது அக்பர்
பதினான்கு மாதக் குழந்தை. கந்தஹாருக்குப் பக்கத்தில் அவர்கள் முகாமிட்டிருந்தனர்.
ஹுமாயூனின் அடுத்தத் திட்டம், ஹிந்துகுஷ் மலைகளைக் கடந்து பாரசீகத்துக்குச்
செல்வதுதான்.
அந்த டிசம்பர்
குளிரில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பனிப்பிரதேசத்தில் பிரயாணம் செய்வதில்
ஹுமாயூனுக்கு விருப்பமில்லை. தன் வாரிசுக்கு ஏதாவது ஆகிவிட்டால்?
7
தன் உறவினர்
அஸ்கரியிடம் ஆலோசனை கேட்டார் ஹுமாயூன்.
‘கவலைப்படாதீர்கள். குழந்தை அக்பரைப் பத்திரமாக வளர்க்கும் பொறுப்பை நானும் என்
மனைவியும் எடுத்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று வெற்றிகரமாகப் படை திரட்டி
வாருங்கள்’ என்று அஸ்கரி
நம்பிக்கை
கொடுத்தார்.
‘அக்பர் இனி என் மகன்’ என்று அஸ்கரியின் மனைவியும் பாசத்தோடு
உறுதியளிக்கவே, ஹுமாயூனும் ஹமீதாவும் பாரசீகத்தை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அவர்களிடமே
அக்பர் வளர ஆரம்பித்தான். மீண்டும் அக்பர் தன் பெற்றோரைக் காண கிட்டத்தட்ட மூன்று
வருடங்கள் காத்திருக்க வேண்டியதிருந்தது. நான்காவது வயதில், அக்பர் தன்
பெற்றோருடன் மீண்டும் சேர்ந்தான்.
அப்போது அவனுக்கு
இஸ்லாமியர்களின் மதச் சடங்கான சுன்னத் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரிய
விருந்தும் கொடுக்கப்பட்டது.
ஹுமாயூன் நன்கு
படித்தவர். புத்தகப் பிரியர். பலவிதமான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். ஆனால்
அக்பருக்கு எழுதுவதிலோ, படிப்பதிலோ ஆர்வமே இல்லை. அதற்காக ஹுமாயூன்
சும்மா விட்டுவிடுவாரா என்ன? அக்பருக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கென
தனியாக ஓர் ஆசிரியரை நியமித்தார்.
8
ஆசிரியர் கடமை
தவறாமல் பாடம் எடுத்துக் கொண்டு இருக்க, அக்பர் மாடங்களில் அமர்ந்திருந்த புறாக்களை
ரசித்துக் கொண்டிருந்தான். தவிர, இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான்.
வேட்டையாடுவது எப்படி என்று விரும்பிக் கற்றுக்கொண்டான்.
சிறுவயதிலேயே
வாள் சண்டையில் வித்தகனாகத் திகழ்ந்தான். குதிரையேற்றத்தில் ஆர்வம் காட்டினான்.
சண்டைப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டான்.
முகலாயர்களின்
பேரரசராக வரப் போகிறவருக்குப் படிப்புத் தேவையில்லை, வீரம் இருந்தால் போதும் என்ற எண்ணம்கூட
அக்பருக்கு இருந்திருக்கலாம். அதனால் தன் கையெழுத்தைப் போடுவதற்குக்கூட அக்பர்
படிக்கவில்லை.
அடுத்தவர்களைப் புத்தகங்கள்
வாசிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தான். அதேபோல, இசையைக் கேட்பதிலும் ஆர்வத்தை வளர்த்துக்
கொண்டான்.
1546. அப்போது ஹுமாயூனுக்கு ஒரு நல்ல செய்தி
கிடைத்தது. எதிரி ஷேர் ஷா இறந்துவிட்டார். ஷேர் ஷாவின் வாரிசான இஸ்லாம் ஷா
டெல்லியில் ஆட்சிக்கு வந்தார். அவரும் 1554ல் இறந்து போனார்.
விட்டதைப்
பிடிக்க, பாரசீகப்
படைகளின் உதவியோடு கிளம்பிய ஹுமாயூன், 1555ல் டெல்லியைக் கைப்பற்றினார். மீண்டும் பாபர்
அமர்ந்த அரியணையில் பெருமிதத்தோடு உட்கார்ந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.
9
ஆறு மாதங்கள்
கடந்திருக்கும். ஹுமாயூன் தன்னுடைய நூலகத்தில் இருந்தார். அப்போது தொழுகைக்கான
அழைப்பு கேட்டது. அதற்காக வேகமாகக் கிளம்பினார். கால் இடறி படிகளில் உருண்டு
விழுந்தார். பலத்த அடி.
சிகிச்சை எதுவும்
பலனளிக்கவில்லை. மூன்றாவது நாள் ஹுமாயூன் இறந்து போனார் (பிப்ரவரி 22, 1556).
அடுத்த முகலாய
மன்னராக அக்பர் அரியணை ஏறினார். அப்போது அவருக்கு வயது பதிமூன்று.
10
***
பைரம் கான் துணை
அத்தனைச்
சிறுவயதில் அரியணை ஏறிய அக்பருக்கு ஏராளமான ஆபத்துகள் காத்திருந்தன. ஹுமாயூனின்
மரணச் செய்தியைக்
கேள்விப்பட்ட
அவருடைய எதிரிகளெல்லாம் முகலாயர்களின் ஆட்சிக்குள்பட்ட இடங்கள் மீது படையெடுத்து, அவற்றைக்
கைப்பற்றத்
திட்டமிட்டனர்.
ஆங்காங்கே
போருக்கான அறிகுறிகள் உருவாகிக் கொண்டே சென்றன. அந்த நேரத்திலும் அக்பர்
அச்சப்படவில்லை. மிகவும் தைரியமாகத்தான் இருந்தார். காரணம் பைரம் கான்.
ஹுமாயூனின் படைத்
தளபதியாக இருந்தவர் பைரம் கான். ஹுமாயூனின் தலைமையில் முகலாயர்கள் பல இடங்களைக்
கைப்பற்றக் காரணமாக இருந்தது பைரம்
11
கானின்
அசாத்தியமான போர்த் திறனே. ஹுமாயூனின் மறைவுக்குப் பிறகு பைரம் கான், அக்பருக்குப்
பக்கபலமாகச் செயல்பட ஆரம்பித்தார். அரியணையில் அக்பர் இருந்தாலும், நிர்வாகப் பொறுப்புகளையெல்லாம்
பைரம் கான்தான்
பார்த்துக் கொண்டார்.
பஞ்சாப் பகுதியை
ஆண்டு கொண்டிருந்தார் சிக்கிந்தர் ஷா. ஷேர் ஷாவின் மருமகன். பைரம் கானின்
தலைமையில் அக்பர் முகலாயப் படைகளோடு
வந்தபோது, சிக்கிந்தர் ஷா
பெரும் எதிர்ப்பெல்லாம் காட்டவில்லை.
சரணடைந்துவிட்டார்.
அவர்
வசிப்பதற்கென்று ஒரு எஸ்டேட் ஒதுக்கப்பட்டது. அதிலேயே வாழ்ந்து வந்த சிக்கிந்தர்
ஷா, சில வருடங்களில்
இறந்து போனார்.
முகலாயர்களின்
முக்கிய எதிரியாக இருந்தவர் ஆப்கான் மன்னர் அடில் ஷா. சரணடைந்த சிக்கிந்தர் ஷாவின்
சகோதரர். அக்பருக்கு எப்படி பைரம் கான் சக்திவாய்ந்த தளபதியாக இருந்தாரோ, அப்படி அடில்
ஷாவுக்கு இருந்த தளபதி ஹெமு.
ஹெமச்சந்திரா
என்கிற ஹெமு, தான் இறுதியாகப் போரிட்ட இருபத்திரண்டு போர்களில் ஒன்றில் கூடத் தோற்கவில்லை.
அவரது மகா பலம் அனைவரையுமே மிரட்டியது.
12
‘உடனே டெல்லி திரும்பி விடுவதே நல்லது’ என்று அக்பருக்கு ஆலோசனை கூறினார் பைரம் கான்.
காரணம் ஹெமு, டெல்லி மீது படையெடுக்கலாம் என்ற அச்சம் தான். அக்பரும் ஒப்புக்கொண்டார்.
மன்னர் என்றாலும் விடலைப் பருவம்தானே. முகலாய வீரர்களை உற்சாகப்படுத்த ஏதாவது
செய்யவேண்டும் என்று திட்டமிட்டார் அக்பர்.
என்ன செய்யலாம்? பட்டாசுகள்
என்றால் அக்பருக்கு இஷ்டம். வாண வேடிக்கை நடத்தினால் என்னவென்று தோன்றியது. அக்பர்
உத்தரவிட, வாண வேடிக்கைகள்
நடந்தன. வீரர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்கள்.
ஆர்வமிகுதி
கொண்டு ஒரு தளபதி, ஹெமுவின் உருவ பொம்மை ஒன்றைச் செய்து அதில்
பட்டாசை நிரப்பி, கொளுத்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஹெமுவின்
லட்சியம், முகலாயர்களை
வீழ்த்தி டெல்லியைக் கைப்பற்றுவதே. தனக்குத் தானே ‘ராஜா விக்ரமாதித்யா’ என்கிற பட்டத்தைச் சூடிக் கொண்ட ஹெமு, ஐம்பதாயிரம்
குதிரைகள், ஆயிரத்து ஐநூறு யானைகள் அடங்கிய மாபெரும் படையோடு டெல்லியை நோக்கிக்
கிளம்பினார்.
ஹெமுவின் படைகள்
ஆக்ராவை மிக எளிதாகக் கைப்பற்றின. அடுத்த இலக்கு டெல்லிதான். டெல்லிக்குச் சுமார்
ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் முகலாயர்களை,
13
ஹெமுவின்
படையினர் தாக்க ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதலை பைரம் கான் எதிர்பார்க்கவில்லை.
இருந்தாலும்
சுதாரித்துக் கொண்ட பைரம் கான், தம் படையினரைத் திரட்டினார். ஹெமுவின் படைகளும், பைரம் கானின்
படைகளும் பானிபட் என்ற இடத்தில் மோதிக் கொண்டன (நவம்பர் 5,
1556). அது இரண்டாம் பானிபட்
போர்.
மிகவும் கடுமையான
போர். ஹெமுவின் கையே ஓங்கியிருந்தது. இருபத்திரண்டு போர்களைத் தொடர்ந்து ஜெயித்த
உற்சாகம், ஹெமுவுக்கு
மேலும் தன்னம்பிக்கையைக் கொடுத்திருந்தது. பைரம் கானும் சளைக்காமல் போராடினார்.
அந்தச் சமயத்தில்
பாய்ந்து வந்த அம்பு ஒன்று ஹெமுவின் ஒரு கண்ணைப் பதம் பார்த்தது. அலறிக் கீழே
விழுந்தார். அந்தக் காயம் ஹெமுவைச் செயலிழக்கச் செய்தது. ஒரு படையின் தளபதி
செயலிழந்துவிட்டால் போதாதா?
முகலாயர்கள்
கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். ஹெமுவின் வழிகாட்டுதல் இல்லாததால் அவரது படையினர்
தங்கள் மன உறுதியை இழந்தனர். உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. இறுதியாக
முகலாயர்களிடம் சரணடைந்தனர்.
ஹெமு கைதியாக
அக்பர் முன் கொண்டு வரப்பட்டார் என்றும், அக்பர் அவரைக் கொன்றார் என்றும் தகவல்கள்
உள்ளன. ஹெமுவைக் கொல்லும்படி அக்பரை பைரம்
14
கான்
கேட்டதாகவும், அவர் மறுக்கவே பைரம் கானே கொன்றதாகவும் சில வரலாற்று ஆசிரியர்கள்
கூறுகிறார்கள். எது எப்படியோ, இரண்டாம் பானிபட் போரில் கிடைத்த வெற்றியினால்
டெல்லியில் முகலாயர்களின்
ஆட்சி மீண்டும்
ஒருமுறை நிலைப்படுத்தப்பட்டது.
மீதமிருந்த
எதிரியான ஆப்கன் அரசர் அடில் ஷா, வங்காள மன்னரோடு போரிட்டுத் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.
அக்பரைச் சூழ்ந்திருந்த ஆபத்துகள் எல்லாம் பைரம் கானால் முறியடிக்கப்பட்டன. அடுத்த
நான்கு
ஆண்டுகள் பைரம்
கானின் தலைமையில் ஆட்சி நடந்தது.
கிழக்கில்
காபூலிலிருந்து ஜான்பூர் (Jaunpur) வரையிலும், மேற்கில் அஜ்மீர் வரையிலும் முகலாயர்களின்
எல்லை விரிவுபடுத்தப்பட்டது. குவாலியர், மால்வா, ரன்தாம்போர் (Ranthambhor)
ஆகியவையும்
கைப்பற்றப்பட்டன.
அப்போது அக்பர்
வாலிபராகி இருந்தார். தானே பொறுப்பை ஏற்று ஆட்சியை நடத்துமளவுக்கு மனவலிமையையும்
முதிர்ச்சியையும் பெற்றிருந்தார். அதே சமயத்தில் பைரம் கானை எதிர்த்து குரல்கள்
ஒலிக்க ஆரம்பித்தன.
பைரம் கான்
தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைத்
தவறாகப்
பயன்படுத்துகிறார். தனக்குக் கீழ் உள்ளவர்களைக் கொடுமைப்படுத்துகிறார். பைரம் கான்
ஷியா என்ற பிரிவைச் சேர்ந்தவர். ஷியா முஸ்லிம்களுக்கே முன்னுரிமை கொடுத்து
பதவிகளில் அமர்த்துகிறார். மற்ற பிரிவு முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கிறார்.
15
இப்படிப் பல
குற்றச்சாட்டுகள் பைரம் கான் மீது கூறப்பட்டன. ஆக்ரா விலிருந்த அக்பர், எல்லாவற்றையும்
கேட்டுக் கொண்டார். இனியும் பைரம் கானிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து
வைத்திருப்பது நல்லதல்ல என்று தோன்றியது.
‘பைரம் கானிடம் எப்படிச் சொல்வது? வயதில் மூத்தவர். திறமையான வீரர். தந்தைக்கு
விசுவாசமாக இருந்தவர். முகலாயப் பேரரசு இந்த அளவுக்கு விரிவடைவதற்குக் காரணமானவர்.
இத்தனை நாள்கள் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றி வருபவர். நான் நேரடியாக
அவரைப் பதவி விலகச் சொல்வதென்பது தர்மசங்கடமாக இருக்குமே. என்ன செய்யலாம்?’
யோசித்த அக்பர், ஒரு திட்டம்
தீட்டினார். அதன்படி, வேட்டைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு
ஆக்ராவிலிருந்து கிளம்பினார். டெல்லிக்குச் சென்றார். அங்கிருந்தபடி, பைரம் கானைப்
பதவியிலிருந்து விலகச் சொல்லி ஆக்ராவுக்குத் தகவல் அனுப்பினார்.
அக்பர், ஆட்சியைத் தன்
கையில் எடுத்துக் கொள்ள விரும்புவது பைரம் கானுக்குப் புரிந்து போனது. ஆனால்
பதவியை விட்டு இறங்கியதுமே, பைரம் கான் மேல் தாக்குதல் நடத்துவதற்காக
எதிரிகள் காத்திருந்தனர்.
அதனால் ராஜிநாமா
செய்யாமலேயே ஆறு மாதங்களைக் கடத்தினார் பைரம் கான். ஆனால் அக்பரிடமிருந்து
மீண்டும் மீண்டும் வற்புறுத்தல் வரவே, பைரம் கான் பதவி
16
விலகினார்.
அக்பரைச் சந்தித்தார். மிகுந்த மரியாதையோடு அவரை வரவேற்ற அக்பர், இரண்டு
வாய்ப்புகளை முன் வைத்தார்.
‘தாங்கள் முகலாய சாம்ராஜ்யத்தில் எங்காவது ஓர் இடத்தில் இருந்து கொள்ளலாம், அல்லது
மெக்காவுக்குச் செல்லலாம்.’
மெக்காவுக்குச்
செல்லலாம் என்று முடிவெடுத்தார் பைரம் கான். 1561, ஜனவரி 31. மெக்காவுக்குச் செல்லும் வழியில் ஆப்கனைச்
சேர்ந்த ஒருவனால் பைரம் கான் கொல்லப்பட்டார்.
அக்பர், பைரம் கானின்
மனைவி சலிமா சுல்தானைத் திருமணம் செய்துகொண்டார். சலிமா அக்பரின் இரண்டாவது மனைவி.
அதற்கு முன்பே ரகுயா பேகம் என்ற பெண்ணை அக்பர் முதல் திருமணம் செய்திருந்தார்.
சலிமாவின் மகனான அப்துர் ரஹீமைத் தன்னுடன் வைத்துக் கொண்டார் அக்பர். (பின்னாளில்
அப்துர் ரஹீமை முகலாய
சாம்ராஜ்யத்தின்
முக்கிய அதிகாரியாக நியமித்தார்.)
17
***
அதம் கான் அராஜகம்
அக்பருக்கு
இன்னொரு புதிய பிரச்னை வந்தது. பிரச்னைக்குக் காரணமானவர் மகம் அனகா. அக்பரின்
வளர்ப்புத் தாய்.
பைரம் கான்
இறந்ததும் அவர் இருந்த இடத்தில் தன் சொந்த மகன் அதம் கானைக்கொண்டுவர வேண்டும்
என்று ஆசைப்பட்டார். அதற்கான திட்டங்களைத் தீட்டினார்.
அதம் கான், நல்ல வீரன்தான்.
ஆனால் நல்ல குணங்களைக் கொண்டவனல்ல. அக்பரின் படைத் தளபதிகளுள் ஒருவனாக இருந்த
அவன், முகலாயப் படைகளை
அழைத்துக் கொண்டு, மால்வா என்ற நகரைக் கைப்பற்றச் சென்றான்.
மால்வாவைக்
கைப்பற்றுவது மட்டுமல்ல அவனது நோக்கம். வேறென்ன?
18
ரூப்மதி.
மால்வாவின் மகாராணி. அவள்மேல் அதம் கானுக்குக் காதல். இந்தப் படையெடுப்பின்
உள்நோக்கம் அதுவாகத்தான் இருந்தது.
மால்வாவை ஆண்டு
வந்த மன்னர் பாஷ் பகதூர். அவருக்கு இசை என்றால் உயிர். மிகச் சிறந்த பாடகர். இசைக்
கருவிகளை மீட்டுவதில் வல்லவர். அவரது ஆட்சியில் இசைக் கலைஞர்கள் ராஜ வாழ்க்கை
வாழ்ந்து வந்தனர். பாஷ் பகதூரின் இசையில் மயங்கினாள் ரூப்மதி. அவளது அழகில்
மயங்கினார் பாஷ் பகதூர். காதலித்துத் திருமணம்
செய்து கொண்டனர்.
பாஷ் பகதூருக்கு
நாட்டை நிர்வகிப்பதிலோ, போர் செய்வதிலோ, படைகளை உருவாக்குவதிலோ ஆர்வம் இருக்கவில்லை.
இருந்த மிகச் சிறிய படையையும் அவர் சரிவரப் பராமரிக்கவில்லை.
இது அதம்
கானுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. முகலாயப் படைகள் வருவது தெரிந்த உடனேயே
மால்வா படையினர் சரணடையத் தயாராகி விட்டனர்.
பாஷ் பகதூர்
மால்வாவை விட்டுத் தலைமறைவாகி விட்டார்.
அதிரடியாக
மால்வாவுக்குள் நுழைந்த அதம் கான், தன்னை
எதிர்க்காதவர்களைக்கூடத்
தாக்கினான். மால்வா முழுவதும் பாஷ் பகதூரைத் தேடினான். கிடைக்கவில்லை.
19
நேராக மால்வா
அரண்மனையின் அந்தப்புரத்துக்குள் நுழைந்தான்.
அதற்குள் மகாராணி
ரூப்மதிக்குச் செய்தி சென்று சேர்ந்திருந்தது. அவளுக்கு அதம் கானின் எண்ணமும்
தெரிந்திருந்தது. அவனிடம் சிக்கிவிடக்கூடாது என்று எண்ணிய ரூப்மதி, விஷம்
சாப்பிட்டுவிட்டாள். அதம் கானுக்கு அவளது பிணம் மட்டுமே கிடைத்தது.
ஏமாற்றம்.
தோல்வி. அதம்கானை மிகவும் கோபப்படுத்தியது. அவன் அறிவை இழக்கச் செய்தது. காட்டு
மிராண்டித்தக்மாக நடக்க ஆரம்பித்தான். அங்குள்ள பெண்களை எல்லாம் கொல்லச் சொன்னான்.
அப்பாவி மக்கள் வெட்டப்பட்டனர். சமாதானம் பேசவந்த மதகுரு
மார்கள்கூட
இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். மால்வா நகர மக்களின் செல்வங்கள் எல்லாம்
கொள்ளையடிக்கப்பட்டன.
அதம் கானின் இந்த
வெறிச் செயல், அக்பரின் காதுகளுக்குச் சென்று சேர்ந்தது. அதம் கானை அடக்குவதற்காக ஒரு சிறு
படையோடு மால்வா நோக்கி அவசரமாகக் கிளம்பினார் அக்பர்.
ஆனால் அதற்கு
முன்பே மகம் அனகா, ‘மகனே, அக்பர் அங்கு வருகிறார். ஜாக்கிரதை’ என்று சிலர்
மூலமாக அதம் கானுக்குத் தகவல் அனுப்பிவிட்டார்.
உஷாரான அதம் கான், அக்பர் வந்ததும்
அவர்முன் அடி பணிந்து நின்றான். நடந்த தவறுகளுக்கெல்லாம் மிகவும்
20
பணிவாக
மன்னிப்புக் கேட்டான். அக்பரும் அவனை எச்சரித்து, மன்னிப்புக் கொடுத்தார். அவன் கைப்பற்றிய
செல்வங்களை எல்லாம் உரியவர்களிடம் ஒப்படைக்கச் சொன்னார். அதற்குப் பின் தன் படைகளோடு
ஆக்ராவுக்குக் கிளம்பினார்.
படைகள் பின்னால்
வந்துகொண்டிருக்க, அக்பரின் குதிரை முன்னால் வேகமாக வரைந்து
கொண்டிருந்தது. அது காட்டுப் பகுதி.
அக்பர் திடீரெனத்
தன் குதிரையின் வேகத்தைக் குறைத்தார். பின்பு நிறுத்தினார். அந்தப் புதர் லேசாக
அசைந்து கொண்டிருந்தது.
சுதாரித்துக்
கொண்ட அக்பர், குதிரையிலிருந்து இறங்கினார். அவர் தன் இடையிலிருந்து வாளை உருவுவதற்கும், அந்தப்
புதரிலிருந்து ஒரு புலி பாய்வதற்கும் சரியாக இருந்தது.
அக்பரின்
படையினர் வந்து சேரும்போது, வாளிலிருந்து ரத்தம் கசிய நின்று
கொண்டிருந்தார். அந்தப் புலி இறந்து கிடந்தது.
அக்பர் ஆக்ரா
சென்றடைந்தார்.
மால்வாவில்
வைத்து, அக்பரிடம்
பணிந்தது போல நடித்த
அதம் கான், அதன் பின்பு தன்
அராஜகங்களைத் தொடர்ந்தான். மால்வாவிலிருந்து இரண்டு அழகான பெண்களை, அக்பருக்குத்
தெரியாமல் கடத்திக் கொண்டு வந்து
21
அடைத்திருந்தான்.
இந்த விஷயம் மகம் அனகாவுக்கு மட்டும் தெரியும். சில ஒற்றர்கள் மூலம் அக்பருக்கும்
விஷயம் தெரிந்துவிட்டது.
தன் மகனுக்கு
ஆபத்து என்று தெரிந்த மகம் அனகா, அந்தப் பெண்களைக் கொன்று புதைத்துவிட்டாள்.
இதற்கு மேலும்
அதம் கானுக்கு அதிகாரம் கொடுத்து பதவியில் வைத்திருந்தால் சரியாக இருக்காது என்று
முடிவு செய்தார் அக்பர். அதம் கானுக்குப் பதிலாக அட்காகான் என்றொரு ஆப்கனியரைப்
புதிய பிரதம மந்திரியாக நியமித்தார்.
அதம் கானுக்கு
இது பெருத்த அவமானமாகப் போய் விட்டது. அவனது கோபத்தைப் பல மடங்குத் தூண்டியது.
அட்கா கானைக் கொல்ல முடிவு செய்தான். திட்டம் தீட்டினான்.
அன்று அக்பர் தன்
அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அட்கா கானும் அதில் கலந்து
கொண்டிருந்தார். கூட்டம் நடந்த அரண்மனையில், அதம் கான் தன் ஆள்களுடன் பதுங்கியிருந்தான்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த அட்கா கான் முன், திடீரெனக் குதித்தான் அதம் கான்.
அவனது ஆள்கள்
சூழ்ந்து கொண்டனர்.
அடுத்த சில
நிமிடங்களில் அட்கா கான் அவர்களால் கொல்லப்பட்டார். அரண்மனையிலேயே நடந்த சம்பவம்
என்பதால் உடனே அக்பருக்குத் தகவல் சென்றடைந்தது.
22
ஓடோடி வந்தார்
அக்பர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அட்கா கானைப் பார்த்ததும் அவரது கண்கள் சிவந்தன.
கோபம் தலைக்கேறியது.
அக்பர்
வருவதற்குள் தப்பித்துவிடலாம் என்று எண்ணியிருந்தான் அதம் கான். ஆனால் அக்பர்
வந்ததும் நிலை தடுமாறினான். வேகமாகச் சென்று அவரது கைகளைப் பிடித்தான். மன்னித்து
விடுமாறு கெஞ்ச ஆரம்பித்தான்.
ஆனால் அக்பர்
அவனது முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டார்.
சுருண்டு
விழுந்தான்.
‘இவனைத் தூக்கிக் கீழே எறியுங்கள்’ என்று தன் வீரர்களுக்கு உத்தரவிட்டார் அக்பர்.
அவர்களும் அந்த உயரமான பால்கனி வழியே அதம் கானைத் தூக்கி எறிந்தனர். அப்படியும்
அதம் கான் உயிருக்கு எதுவும் நேர்ந்துவிடவில்லை.
‘இவனை மீண்டும் தலைகீழாகத் தூக்கி எறிந்து கொல்லுங்கள்’
என்று கத்தினார் அக்பர்.
அப்படியே செய்தனர். அதம் கான் இறந்து போனான்.
தன் வளர்ப்புத்
தாயான மகம் அனகாவிடம் விரைந்து சென்றார் அக்பர்.
‘இதற்கு மேலும் என்னால் அதம் கானின் அட்டூழியங்களைப் பொறுத்துக்
கொள்ளமுடியவில்லை. அவன்
23
கொல்லப்பட்டுவிட்டான்’ என்று
சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
தகுந்த
மரியாதையுடன் அதம் கானின் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
மால்வாவிலிருந்து
ஓடிப்போன முன்னாள் மன்னரும், ரூப்மதியின் கணவருமான பாஷ் பகதூர் இறுதியாக
அக்பரிடமே வந்து சரணடைநதார். அவர் மேல் இரக்கப்பட்ட அக்பர், தன்
சாம்ராஜ்ஜியத்தில் பதவி கொடுத்து கெளரவப்படுத்தினார். பின்னாளில் பாஷ் பகதூர்
இறந்த போது, ரூப்மதியைப் புதைத்த இடத்துக்கு அருகிலேயே புதைக்கப்பட்டார்.
24
[இந்திய வரைபடம்: முகலாயப் பேரரசு அக்பர் காலம் (1605)]
25
***
போரின்றி அமையாது
பேரரசு
அப்போது
அக்பருக்கு வயது பத்தொன்பது. அவ்வளவு நாள்கள் எதிரிகளைச் சமாளித்துக் கொண்டிருந்த
அக்பர், அதற்குப் பின்
முகலாய
சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் நடவடிக்கைகளில்
இறங்கினார்.
எப்படி?
தான் கைப்பற்ற
விரும்பும் பகுதிகளின் மீது படையெடுத்துச் செல்வார். முகலாயப்படையின் முன்
சிற்றரசர்கள் தாக்குப்பிடிக்க முடியுமா என்ன? மறுபேச்சின்றி சரணடைந்து விடுவார்கள்.
பல சமஸ்தானங்களை
முகலாயப் பேரரசோடு இணைக்க, அந்த மன்னர்களோடு திருமண உறவை வளர்த்துக்
கொண்டார் அக்பர்.
அதாவது அந்தச்
சாம்ராஜ்யத்தில் இளவரசி இருந்தால், திருமணம் செய்து கொண்டார்.
26
இப்படி அக்பர்
செய்த திருமணங்கள் ஏராளம். மதம் பார்க்கவில்லை. ஹிந்து மதத்தைச் சார்ந்த இளவரசிகள்
பலரை மணம் முடித்துக் கொண்டார். குறிப்பாக ராஜபுத்திர வம்சத்தைச் சார்ந்த
இளவரசிகள்.
இதனால்
முகலாயர்களின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டே போனது.
அம்பர் (தற்போதைய
ஜெய்ப்பூர்) சமஸ்தானத்தை முகலாய சாம்ராஜ்யத்தோடு இணைக்க விரும்பினார் அக்பர்.
அம்பரை ஆண்டு வந்தவர் ராஜா பர்மால்.
அவருடைய அழகான
மகள் ஹிரா கன்வாரி (Hira Kanwari). அக்பருக்கு ஹிராவைப் பிடித்திருந்தது. ஹிராவின்
பெயரை ஜோதாபாய் என்று மாற்றினார். திருமணம் செய்து கொண்டார். தன் அரண்மனையில்
ஜோதாபாய் ஒரு ஹிந்துவாக வாழ்வதற்கு அனுமதியும் கொடுத்தார்.
ஜோதாபாய்
அக்பரின் மூன்றாவது மனைவி. தான் திருமணம் செய்து கொண்ட பெண்களில் அக்பர் முதல்
மரியாதை கொடுத்தது ஜோதாபாய்க்குத்தான்.
அதுவரை ஆண்
வாரிசில்லாத அக்பருக்கு ஜோதாபாயின் மூலமாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது (1569). அந்தக்
குழந்தையின் பெயர், நூருதின் சலிம் ஜஹாங்கீர்.
முகலாயர்கள்
அடுத்ததாக கார்கட்டங்கா (Ghar-Katanga) ராஜ்யத்தைக் கைப்பற்றத் திட்டம் போட்டனர்.
27
கார்கட்டங்கா
என்பது தற்போதைய மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பகுதி. நர்மதா நதிக்கரையோரமாக
அமைந்துள்ளது. அதனை ராஜ்புத்திரர்களும், கோன்ட் (Gond) இனத்தவர்களும் ஆண்டு வந்தனர். அவர்களின்
படையில் பல்லாயிரக்கணக்கான குதிரைகளும், ஆயிரக்கணக்கான யானைகளும் இருந்தன.
கார்கட்டங்கா
மன்னரான சங்ராம் ஷா, தன் ராஜ்யத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, அருகிலிருந்த
மகோபா சமஸ்தானத்தின் இளவரசியான துர்காவதியை மணந்து கொண்டார்.
திருமணமான சில
வருடங்களில் சங்ராம் ஷா இறந்து போனார். தன் மகன் சந்திரா ஷாவை அரியணையில் அமர
வைத்த துர்காவதி, ஆட்சியைக் கவனித்துக் கொண்டார்.
துர்காவதி போர்
புரிவதில் வல்லவர். குறிப்பாகக் குறி பார்த்து அம்பு எய்வதிலும், துப்பாக்கியால்
சுடுவதிலும் கெட்டிக்காரர். தன் எல்லைக்குள் ஒரு புலி வந்துவிட்டால் போதும், அதைச் சுட்டு
வீழ்த்தும்வரை ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். தைரியமாகப் பக்கத்து
சமஸ்தானங்கள்
மீது படையெடுத்து தன் ராஜ்யத்தை விரிவாக்கினார்.
கார்-கட்டங்காவைப்
பிடிக்க, முகலாயர்களின்
அலகாபாத் தளபதியான அஸஃப் கான் தலைமையில் படை சென்றது. துர்காவதியின் வீரம் அஸஃப்
கானைக் கவர்ந்திருந்தது. அதனால் அவரைக் காதலித்தார்.
28
எப்படியாவது
கார்கட்டங்காவைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று உத்வேகத்துடன் படையெடுத்துச்
சென்றார்.
கடுமையான மோதல்
நடந்தது. ஆனால் முகலாயர்களின் பெரும் படைக்குமுன், துர்காவதியின் படையினரால் தாக்குப் பிடிக்க
முடியவில்லை. சில வீரர்களுடன் துர்காவதி தப்பி ஓடினார். ஆனால் முகலாயப் படையினர்
சூழ்ந்து கொண்டனர்.
அவர்கள் கையில்
சிக்கிவிடக் கூடாது என்று முடிவெடுத்த துர்காவதி, தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு உயிரை
மாய்த்துக் கொண்டார்.
அஸஃப் கான்
அங்கிருக்கும் செல்வங்களை எல்லாம் கொள்ளையடிக்க உத்தரவிட்டார். அவர்களின்
குதிரைகளை, யானைகளைப் பெருமளவில் கைப்பற்றினார்.
அக்பருக்கு
விஷயம் தெரிய வந்தது. அஸஃப் கானை எச்சரித்த அவர், கொள்ளையடித்த செல்வங்களைத் திரும்பக்
கொடுக்குமாறு உத்தரவிட்டார்.
துர்காவதியின்
மகனான சந்திரா ஷாவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தார். மற்றபடி அதைச்
சுற்றியிலுள்ள பகுதிகள் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் வந்தன.
அடுத்த பத்து
வருடங்கள் அக்பர் வாழ்க்கையில் போர்க்களமே மிகுந்திருந்தது. காரணம், இந்தியா
முழுவதையும்
29
முகலாயர்களின்
ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்து விட வேண்டுமென்ற ஆசை. லட்சியம்.
பல அரசர்கள்
அடிபணிந்து முகலாயர்களின் ஆட்சியை ஏற்றுக் கொண்டனர்.
மேவார் மன்னர்
ரானா உதய் சிங்கைத் தவிர.
மேவார்
சமஸ்தானத்தின் தலைநகரம் சித்தூர். அக்பர், உதய் சிங்குக்கு அடிபணிந்து விடுமாறு தூது
விட்டார். ஆனால் உதய் சிங் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 1567 செப்டெம்பரில் முகலாயப் படைகள் சித்தூர்
கோட்டையைச்
சூழ்ந்தன.
சாதாரணக் கோட்டையா
அது? நூற்றி இருபது
மீட்டர் உயரமுள்ள ஒரு சிறிய மலையின் மேல் கட்டப்பட்டிருந்தது. கோட்டையைச் சுற்றி, பன்னிரண்டு கிலோ
மீட்டர் சுற்றளவுக்கு மதில் சுவர்கள். சுவருக்கு வெளியே சுற்றிலும் அகழி. அதாவது
நீராலும் முதலைகளாலும்
நிரப்பப்பட்ட
பெரிய கால்வாய்.
எதிரிகள் யாரும்
எளிதில் கோட்டையை நெருங்கிவிடவே முடியாது. கோட்டையிலிருக்கும் கோபுரங்களிலிருந்து
தாக்கும் வீரர்களைச் சமாளிப்பதென்பது கஷ்டமான விஷயம்.
அந்தத்
தைரியத்தில்தான் மன்னர் உதய் சிங், முகலாயப் படைகளை ‘வந்து பார்’ என்று சவால் விட்டார். அக்பருக்கும் அது பெரிய
சவால்தான். ஏனென்றால் சித்தூரை
31
வென்றால்தான்
எஞ்சியிருக்கும் ராஜ்புத்திரர்களும் அடிபணிய முன்வருவார்கள்.
அதுவரை
முகலாயர்களுக்குப் பணிந்திருக்கும் ராஜ்புத்திர மன்னர்கள்கூட, சித்தூர் மன்னர்
பணியாத தைரியத்தில்
எதிர்ப்புக்
காட்ட ஆரம்பிக்கலாம்.
அக்பர் மிகவும்
முயற்சி செய்து போருக்கான திட்டங்களை
வகுத்திருந்தார்.
முகலாயப் படைகள்
கோட்டையை நெருங்குவதற்கே மிகவும் கஷ்டப்பட்டன. கோட்டையைத் தாக்குவதற்கு இன்னமும்
கஷ்டப்பட வேண்டியதிருந்தது. இருந்தாலும் முகலாயர்களின் படைபலம் அதிகம் என்பதால்
தாக்குதலைத் தொடர்ந்து நடத்த முடிந்தது.
ஜெய்மால், பட்டா ஆகியோர்
சித்தூரின் தளபதிகள். ‘சித்தூர் சிங்கங்கள்’ என்பது அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். மிகச்
சிறந்த வீரர்கள். அவர்களது தலைமையில் சித்தூர் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல்
நடத்தினர்.
கோட்டைக்குள்ளிருக்கும்
மக்களுக்கு உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் வராதபடி பார்த்துக்
கொண்டார்கள்.
ஆனாலும் எவ்வளவு
நாள்கள்தான் தாக்குப் பிடிக்க முடியும்? 1568 பிப்ரவரி. போர் தொடங்கிய ஆறாவது மாதம்.
சித்தூர் கோட்டைக்குள் நீர் குறைந்தது. உணவில்லை. போர் வீரர்கள்
சோர்வடைந்திருந்தனர்.
30முகலாயர்கள் தாக்குதலை வேகப்படுத்தினர். தளபதி ஜெய்மால் அக்பரால்
கொல்லப்பட்டார். தளபதி பட்டாவும் மரணமடைந்தார். ஆனால் மன்னர் உதய் சிங்
அங்கிருந்து தப்பித்து ஆரவல்லி மலைப் பகுதிக்குச்
சென்று ஒளிந்து
கொண்டார்.
முகலாயப்
படையினர் கோட்டைக்குள் நுழைந்தனர். சித்தூர் வீரர்களைத் தேடிப் பிடித்துக்
கொன்றனர். மறுநாள் காலை கண்ட காட்சி அக்பரை அதிர்ச்சியடையச் செய்தது.
இறந்த வீரர்களின்
சடலங்கள் ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்தன. அவர்களது மனைவிமார்கள் அந்தத் தீயில்
விழுந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தனர். (இந்தச் சடங்கு உடன்கட்டை
ஏறுதல் அல்லது சதி என்றழைக்கப்பட்டது.)
அந்தப் பெண்களைத்
தடுக்கச் சொல்லித் தம் வீரர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் அந்தப் பெண்கள் தம்
நகங்களால் கீறியும், பற்களால் கடித்தும் வீரர்களைக்
காயப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில்
கோபமடைந்த வீரர்கள் பெண்களைத் தாங்களே கொல்ல ஆரம்பித்தனர். மற்ற மக்களும்
கொல்லப்பட்டனர்.
பல மணி நேரங்கள்
தொடர்ந்த அந்த வெறிச் செயலின் முடிவில், சித்தூர் மக்கள் யாருமே உயிர் பிழைக்கவில்லை.
எட்டாயிரம் வீரர்களும், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் கொன்று
குவிக்கப்பட்டிருந்தனர்.
32
அக்பர், தன் வாழ்வில்
செய்த மிகக் கொடூரமான செயல் என்றால் அது இந்தச் சித்தூர் சம்பவம்தான். சித்தூர்
தளபதிகள் ஜெய்மால், பட்டாவின் நினைவாக, ஆக்ரா அரண்மனை வாசலில் அவர்கள் யானையில்
அமர்ந்திருப்பதுபோல் சிலைகள் அமைத்தார்.
சித்தூர் கோட்டை
மட்டுமே முகலாயர்கள் வசமாகியிருந்தது, மேவார் சமஸ்தானம் அல்ல. அதையும் தம் வசப்படுத்த
முகலாயர்கள் போராட வேண்டியதிருந்தது.
முகலாயர்களின்
சித்தூர் வெற்றி, அருகிலிருந்த பல மன்னர்களின் வயிற்றைக் கலக்கியது. பாட்னா மன்னர் காரம்
முகலாயர்களிடம் சரணடைந்தார். பிகானர், ஜெய்சால்மீர் மன்னர்களும் சரணடைந்தனர்.
சித்தூர்
கோட்டையிலிருந்து தப்பி ஓடினாரே மகாராஜா உதய் சிங், அவர் மீண்டும் படைதிரட்டிக் கொண்டு வந்து
முகலாயர்களை எதிர்க்கவில்லை. சில வருடங்கள் தலைமறைவாக வாழ்ந்த அவர், பின்பு இறந்து
போனார்
(1572, மார்ச் 3).
ஆனால் அவரது மகன்
ரானா பிரதாப் சிங், சும்மா இருக்கவில்லை. மேவாரிலும், அதைச் சுற்றியுள்ள
ஆரவல்லி மலைப்பகுதிகளிலும் தலைமறைவாக இருந்து கொண்டு முகலாயர்களைத் தாக்கிக்
கொண்டே இருந்தார்.
ராஜ்புத்திர
வம்சத்தினருக்கே உரிய வீரம் அவரிடம் நிறையவே இருந்தது. இழந்த சித்தூரை எப்படியாவது
33
மீட்டே ஆக
வேண்டும் என்று இரவு பகலாகத் திட்டம் போட்டார்.
தனக்குத் தெரிந்த
மன்னர்களிடம் எல்லாம் சென்று படை உதவி பெற்று முகலாயர்களை எதிர்த்து வந்தார்.
அக்பருக்கு
பிரதாப் சிங்கின் செயல் மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது. தாக்குதல்களைச்
சமாளிப்பதென்பது பெரிய விஷயமில்லை.
ஆனால் பிரதாப்
சிங்கை முற்றிலுமாக அடக்க முடியவில்லை. எனவே அக்பர், தன் அமைச்சர் மன் சிங்கிடம் ஒரு வேலை
கொடுத்தார்.
‘நீங்கள் எப்படியாவது பிரதாப் சிங்கை ஒரு மதிய விருந்துக்கு அழைத்து வாருங்கள்.
பேசிக் கொள்ளலாம்.’
மன் சிங்கும்
அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதாவது அடக்க முடியாத பிரதாப் சிங்கிடம், சமாதானம் பேசலாம்
என்பதே அக்பரின் திட்டம். ஆனால் பிரதாப் சிங் அக்பரின் அழைப்பை நிராகரித்தார்.
அமைதிப் பேச்சு
வார்த்தையை எல்லாம் அவர் விரும்பவில்லை. தனக்குப் பதிலாகத் தன்னுடைய மகன் அமர்
சிங்கை விருந்துக்கு அனுப்பி வைத்தார். அக்பரது சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தன.
1576ல் ஹல்திகட் (Haldighat) என்ற இடத்தில் பிரதாப் சிங்கின் படைகளும், முகலாயர்களின்
படைகளும் மோதிக் கொண்டன.
34
பிரதாப் சிங்கின்
அசுர வேகத் தாக்குதலிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார் மன் சிங்.
எண்பதாயிரம் பேர்
கொண்ட முகலாயப் படையினரால், இருபதாயிரம் பேர் கொண்ட பிரதாப் சிங் படையினரை
அடித்து விரட்ட
முடியவில்லை.
மன் சிங், புதிய
திட்டமொன்றை வகுத்தார். படைகளை அடக்க முடியாவிட்டாலும், பிரதாப் சிங்கையாவது கொன்று விடலாம் என்பதே
அந்தத் திட்டம். அதன்படி முகலாயப் படையினர், பிரதாப் சிங்கைச் சுற்றி வியூகம் அமைத்தனர்.
அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
அந்தச் சமயத்தில்
அவரது உறவினர் சக்தி சிங் உள்ளே புகுந்து தன் உயிரைக் கொடுத்து பிரதாப் சிங்
தப்பிக்க உதவி செய்தார்.
தன் குதிரை
சேத்தக்கின் உதவியுடன் அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தார் பிரதாப் சிங்.
அந்தப் போரில்
தோல்வியடைந்தாலும் ரானா பிரதாப் சிங், தன் முயற்சிகளைக் கைவிடவேயில்லை. 1597ல் தான்
இறக்கும்வரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முகலாயர்களை எதிர்த்துப் போரிட்டுக்
கொண்டேதான் இருந்தார்.
ஆனால் இறுதிவரை
அவரால் சித்தூரை முகலாயர்களிடமிருந்து மீட்க முடியவில்லை.
35
பிரதாப் சிங்கின்
போராட்டத்தை, அவரது மகன் அமர் சிங் தொடந்தார். ஆனால் 1599ல் நடந்த போர் ஒன்றில் அமர் சிங், முகலாய அமைச்சர்
மன் சிங்கிடம் தோற்றுப் போனார். அதற்குப் பிறகு அக்பர், தன் உடல்நிலை
ஒத்துழைக்காத
காரணத்தினால் மேவாரைக் கைப்பற்றும் முயற்சிகளைக் கைவிட்டுவிட்டார்.
36
***
எங்கும்
முகலாயர்கள்
அக்பரின் அடுத்த
இலக்காக குஜராத் இருந்தது. குஜராத்தின் சில பகுதிகள் ஏற்கெனவே ஹுமாயூனால்
ஆளப்பட்டு வந்தவை. பின்பு கைவிட்டுப் போனவை. அந்தப் பகுதிகளின் செல்வச் செழிப்பும், வியாபார
வாய்ப்பும்
அக்பரை வியப்பில்
ஆழ்த்தின. எப்படியாவது குஜராத்தை வளைத்துவிட வேண்டுமென்று திட்டங்கள் தீட்டினார்.
1572ன் இறுதியில், அஜ்மீர் வழியாக அகமதாபாத் வரை முன்னேறினார்
அக்பர். முகலாய வீரர்கள் வாளை உருவும் முன்னரே அகமதாபாத் அவர்கள் வசமானது. அக்பர், அகமதபாத்தை
அடைந்தார். அப்போதுதான்
முதன்முதலில்
கடலைக் கண்டார்.
கடலைக் கண்ட
மகிழ்ச்சியில் அதில் பயணம் செய்ய ஆசைப்பட்டார். படகு ஏற்பாடு செய்யப்பட்டது. பயணம்
செய்து மகிழ்ந்தார்.
37
அந்தக் கடல்
பகுதியில் போர்ச்சுக்கீசியர்கள் நிறைந்திருந்தனர். வணிக ரீதியாக வந்திருந்தாலும்
போர்ச்சுக்கீசியர்களின் நோக்கம் இந்தியாவைக் கைப்பற்றுவதாகத்தான் இருந்தது. அக்பர், சில
போர்ச்சுக்கீசிய வணிகர்களைச் சந்தித்துப் பேசினார். ஆனால்,
அக்பரின் படைகளைப்
பார்த்த
போர்ச்சுக்கீசியர்கள் கலங்கித்தான் போயினர்.
1573ல் சூரத் அக்பர் வசமானது. குஜராத் முகலாயர்களால் முழுமையாகக்
கைப்பற்றப்பட்டது.
அக்பர் மீண்டும்
ஆக்ராவுக்குத் திரும்பினார். ஆனால் அந்தச் சமயத்தில் குஜராத்தில் ஆங்காங்கே
பதுங்கியிருந்த எதிரிகள் ஒன்றிணைந்து, பல பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.
அக்பருக்குத்
தகவல் சென்றது. குதிரைகள், ஒட்டகங்கள், தேர்களுடன் சுமார் மூவாயிரம் வீரர்களை மட்டும்
தயார் செய்தார். மின்னல் வேகத்தில் குஜராத் நோக்கிக் கிளம்பினார்.
அந்த நாள்களில்
ஆக்ராவிலிருந்து குஜராத்தை அடைய குறைந்தது ஆறு வாரங்களாவது பிடிக்கும். ஆனால்
ராஜ்ஸ்தானின் குறுக்கே பயணம் செய்து, பதினோராவது நாளில் குஜராத்தை அடைந்தார் அக்பர்.
எதிரிகள்
வெலவெலத்துப் போய்விட்டனர். அவர்கள் இருபதாயிரம் பேராகத் திரண்டிருந்தாலும், மூவாயிரம் பேர்
கொண்ட முகலாயப் படையினரைச் சமாளிக்க இயலவில்லை. தோற்றுப் போனார்கள். அக்பர்
ஒவ்வொரு
38
பகுதியையும்
ஆட்சி செய்ய கவர்னரை நியமித்தார். பின்பு வங்காளம் நோக்கிக் கிளம்பினார்.
வங்காளமும்
பிகாரும் அப்போது ஆப்கனியர்கள் வசமிருந்தது. ஒரிஸாவின் மன்னரைக் கொன்று அதனையும்
ஆப்கனியர்கள் கைப்பற்றியிருந்தனர். அப்போது தாவுத் கான் என்பவர், தன்னை ஆப்கனின்
மன்னராக அறிவித்திருந்தார். அவர் முகலாயர்களை எதிர்க்கத்
தயாராக
இருந்தார்.
தாவுத்துக்குத்
தன் மாபெரும் படைகளின் மேல் நம்பிக்கையிருந்தது. நாற்பதாயிரம் குதிரைகள், ஒரு லட்சத்து
ஐம்பதாயிரம் வீரர்கள், ஆயிரக்கணக்கான யானைகள்,
எக்கச்சக்கமான
துப்பாக்கிகள், போதாக்குறைக்குப் போர்க் கப்பல்கள்.
கவனத்துடன்
செயல்பட வேண்டிய நேரம் இது என்று அக்பருக்குப் புரிந்திருந்தது. கொஞ்சம்
தவறவிட்டாலும் பழைய கதைதான் நிகழும். பழைய கதை என்றால், ஹுமாயூன், ஆப்கன் மன்னர் ஷேர் ஷாவிடம் தோற்றுப் போனாரே, அதே போல்.
போதுமான அளவு
படகுகளைத் தயார் செய்த அக்பர், தன் படைகளைக் கடல் வழியாக அனுப்பினார். வெகு
சாமர்த்தியமாகத் திட்டமிட்டு ஒவ்வொரு தாக்குதல்களையும் நடத்தினார். பிகாரின்
முக்கிய நகரமான பாட்னா, முகலாயர்கள் வசமானது. அந்த வெற்றி
ஆப்கனியர்களைக்
கொஞ்சம் பின்
வாங்கச் செய்தது.
39
அமைதி
காப்பதுபோல் இருந்த தாவுத், திடீரென்று மீண்டும் தாக்குதல்களைத்
தொடங்கினார். வங்காளத்திலும் பிகாரிலும் ஆப்கனியப் படைகளுக்கு முன், முகலாயப் படைகள்
பலம் குறைந்தே காணப்பட்டன.
போர் நீண்ட காலம்
இழுக்கும் என்று தோன்றியது. அதே சமயத்தில் ஆக்ராவுக்கோ, டெல்லிக்கோ ஆபத்து வந்துவிட்டால்?
யோசித்த அக்பர், தனது
நம்பிக்கைக்குரிய தளபதியான முனிம் கானிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, ஆக்ரா
திரும்பினார். முனிம் கானின் தலைமையில் முகலாயர்கள் தொடர்ந்து வெற்றிகரமாகப்
போரிட்டனர். இறுதியாக 1576, ஜூலையில் பிகாரில் தாவுத் கான் கொல்லப்பட்டார்.
பிகார்
முகாலயர்களின் வசம் வந்தது. வட இந்தியாவில் ஆப்கனியர்களின் ஆக்கிரமிப்புகள் ஒரு
முடிவுக்கு வந்தன. முகலாயப் படைகள் ஆப்கன் நோக்கி முன்னேறின.
காபுலின்
கவர்னராக, அக்பரின் சகோதரர்
முறை கொண்ட மிர்ஸா முகம்மது ஹக்கிம் இருந்தார். ஹக்கிமுக்கு இந்தியாவைக் கைப்பற்றி, அதன் பேரரசராக
வேண்டும் என்ற ஆசை. அதற்காகப் பஞ்சாப் பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத்
தொடங்கினார்.
பொறுத்துப் பொறுத்துப்
பார்த்த அக்பர், 1581ல் காபூல் நோக்கிப் படையெடுத்தார். ஹக்கிம், அக்பரை
எதிர்க்கவெல்லாம் இல்லை. சரணடைந்தார்.
40
அக்பர் தன்
சகோதரி பக்துனிஷா பேகத்தைக் காபுலின் கவர்னராக நியமித்துவிட்டுத் திரும்பினார்.
இஸ்லாமிய சமூகக் கட்டுப்பாடுகளை மீறி, பெண்களைப் பதவியில் அமர்த்துவதற்கு அக்பர்
தயங்கவேயில்லை.
சிறந்த வணிக
நகரமாக விளங்கிவந்த கந்தஹார் முகலாயர்களால் கைப்பற்றப்பட்டது. ராஜா தோடர்
தலைமையில் சென்ற முகலாயப் படைகள், ஆப்கனில் பல பகுதிகளைக் கைப்பற்றின. 1586ல் காஷ்மீர்
சுல்தான் யூசுஃப் ஷா தோற்கடிப்பட்டார்.
1591ல் சிந்து, 1592ல் ஒரிஸா, 1595ல் பலுசிஸ்தான் ஆகியவற்றில் முகலாயர்களின் கொடி
பறந்தது. இமயமலை, நர்மதா, பிரம்மபுத்திரா என்று முகலாயப் பேரரசின் எல்லைகளை விரிவாக்கும் அக்பரின்
ஒவ்வொரு கனவும் நிறைவேறிக் கொண்டே வந்தது.
1604. வடக்கே கந்தஹார், காபுலிலிருந்து தெற்கே அசிர்கர், அகமத்நகர் அரை, கிழக்கே கூச்
பேகாரிலிருந்து மேற்கே சூரத் அரை முகலாயப் பேரரசு பரந்து விரிந்து மிளிர்ந்தது.
அக்பரின் நிர்வாகத் திறமை, போர்த் தந்திரங்கள், அசாத்தியமான ஆளுமையே இத்தகைய வெற்றி வரக்
காரணமாக இருந்தது.
41
***
சட்டம், நீதி, நிர்வாகம்
அக்பர் தான்
ஆட்சிக்கு வந்த எட்டாவது ஆண்டில் சுங்க வரியை (pilgrim
tax) நீக்கினார். ஒன்பதாவது
ஆண்டில் ஜிஸியா (jizya) வரியை
நீக்கினார்.
சுங்க வரி என்றால், வெளி சமஸ்தானங்களிலிருந்தோ, வெளி
நாடுகளிலிருந்தோ முகலாயப் பேரரசின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புனிதப் பயணம்
மேற்கொள்ள வரும் மக்களிடம் வசூலிக்கப்படும்
வரி. ஜிஸியா வரி
என்றால், இஸ்லாமிய
மதத்தைச் சாராதவர்கள், இஸ்லாமியப் பேரரசின் கீழ் பாதுகாப்பாக
வாழ்வதற்குச் செலுத்த வேண்டிய வரி.
இந்த இரண்டு
வரிகளையும் நீக்கி, தனக்கு எல்லா மதத்தினர்களும் முக்கியமானவர்கள்
என்று நிரூபித்தார்.
அக்பரின்
அமைச்சரவை நான்கு முக்கிய துறைகளைக் கொண்டிருந்தது. பிரதம அமைச்சர்
42
[அக்பரின் அமைச்சரவையை விளக்கும் ஓவியம்]
43
(வகீல்), நிதி அமைச்சர் (திவான் அல்லது வாசிர்), ராணுவ அமைச்சர் (மிர்பக்ஷி), நீதி மற்றும் மத
நிர்வாக அமைச்சர் (sard us-sudur) என்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி மந்திரிகள்.
அலாகாபாத், ஆக்ரா, அயோத்யா, அஜ்மீர், அகமதாபாத், பிகார், வங்காளம், டெல்லி, காபூல், லாகூர், முல்தான்,மால்வா, அகமத்நகர், கந்தேஷ், பேரர் ஆகிய
பதினைந்து மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருந்தன.
காஷ்மீரும்
கந்தஹாரும் காபுலின் கீழ் மாவட்டங்களாக இருந்தன. ஒரிஸா, வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
மேலே சொன்ன
நான்கு அமைச்சர்களும், கவர்னரும் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனியாக
நியமிக்கப்பட்டிருந்தனர்.
மாகாணங்கள்
மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. மாவட்டத்தை நிர்வகிப்பவர் கொத்வால் (காஸி) என்றழைக்கப்பட்டார்.
முதலில் இஸ்லாமியர்களுக்கு ராணுவத்திலும் மற்றத் துறைகளிலும் உயர் பதவிகள்
வழங்கப்பட்டன.
ராஜபுத்திரர்களுடன்
அக்பர் உறவை வளர்த்துக் கொண்ட பின்பு ஹிந்துக்களுக்கும் அம்மாதிரியான உயர்பதவிகள்
ஒதுக்கப்பட்டன. குறிப்பாக, ராஜ்புத்திர அரசர்களின் குடும்பத்தினர்களுக்குப்
பல துறைகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.
44
முகலாயப் பேரரசை
ஏற்றுக் கொண்ட ராஜ்புத்திர அரசர்கள், ஜமீன்தார்கள்போல நடத்தப்பட்டனர். பரந்து
விரிந்த முகலாயப் பேரரசின் பல பகுதிகளை ராஜ்புத்திர வீரர்கள் காவல் காத்துவந்தனர்.
பொது நிர்வாகம், ராணுவத்தில்
பதவிகள் ரேங்க் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இது பழைய டெல்லி
சுல்தான்களும் மங்கோலியர்களும் பின்பற்றி வந்த முறையாகும்.
ரேங்க் என்பது 10 முதல் 5000 வரை இருந்தது. 10 என்பது மிகவும்
சாதாரண நிலை. 5000 மிகவும் உயரிய பதவிக்குரிய ரேங்க். இந்த ரேங்க் பட்டியலில் வருபவர்கள், மன்ஸப்தார்ஸ்
என்றழைக்கப்பட்டனர். பாபர், அக்பர் காலத்திலிருந்தே இந்த மன்ஸப்தாரி முறை
கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால் இந்த
முறையில் அக்பர் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். முக்கியமாக ரேங்க் 5000 என்பதை 7000 வரை
உயர்த்தினார்.
எல்லாத்
துறைகளிலும் இந்த மன்ஸப்தார்கள் இருந்தனர். அதிக ரேங்க் பெற்றவர்கள், மன்ஸப்ஸ்
ஆவார்கள். அக்பர் தன் முக்கிய அமைச்சர்களான மன் சிங்குக்கும், மிர்சா அஸிஸ்
கொகாவுக்கும் ரேங்க் 7000 கொடுத்திருந்தார்.
ஒவ்வொரு
மன்ஸப்ஸையும் பதவியில் அமர்த்தும் அல்லது நீக்கும் அதிகாரம் அக்பருக்கு மட்டுமே
உண்டு.
45
இந்த
மன்ஸப்தார்களில் இரண்டு வகையினர் இருந்தனர். ஸட் மற்றும் ஸாவர் (zat and sawar.) தனக்குக் கீழ்
படைவீரர்களை வைத்துப் பராமரிப்பவர் ஸட் வகையினர்.
தனக்குக் கீழ்
விலங்குகளை (குதிரைகள், ஒட்டகங்கள்,யானைகள், கழுதைகள்) வைத்துப் பராமரிப்பவர் ஸாவர்
வகையினர். அவர்களுக்குரிய ரேங்க்கைப் பொருத்து படையினரது எண்ணிக்கையும், குதிரைகளின்
எண்ணிக்கையும் மாறுபடும்.
சில
மன்ஸப்தார்கள், தனக்குக் கீழ் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான வீரர்களை (அல்லது
விலங்குகளை) வைத்திருப்பர். அதனால் அவர்கள் அடிக்கடி இடம் மாற்றப்படுவர்.
அந்த
இடத்துக்குப் புதிய மன்ஸப்தார் நியமிக்கப்படுவார். காரணம் ஒரே இடத்தில் ஒருவர்
பதவியில் இருந்தால் இவ்வளவு பெரிய படையை விரிவாக்கி, அந்தப் பகுதி மக்களின் ஆதராவுத் திரட்டி
அரசுக்கு எதிராகச் செயல்பட நினைக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான்.
ரேங்க் 5000க்கு மேலுள்ள
மன்ஸப்தார்கள் சிலர், தங்களுக்குக் கீழ் 340 குதிரைகள், 100 யானைகள், 400 ஒட்டகங்கள், 100 கழுதைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற நிலை
இருந்தது. அதுவும் தங்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தில்தான் (மாதம் ரூபாய்
முப்பதாயிரம்)
படைகளைப் பராமரிக்க
வேண்டும். பின்பு, பராமரிப்புச்
செலவுக்கென
தனியாக நிதி வழங்கப்பட்டது.
46
மன்ஸப்தார்களில்
ரேங்க் 100க்கு கீழ்
உள்ளவர்கள் வருடம் ரூபாய் ஏழாயிரம் ஊதியம் பெற்றனர். சொல்லப்போனால் இந்த
மன்ஸப்தாரி முறையைப் பின்பற்றிய அரசுகளில் முகலாயர்களைப் போல அதிகம் ஊதியம்
கொடுத்தவர்கள் யாரும் இல்லை.
நில வரி
வசூலிப்பதில் அக்பர் ஷேர் ஷாவின் முறையைப் பின்பற்றினார்.
அக்பரின் முக்கிய
அமைச்சரான ராஜா தோடர் மாலின் நிர்வாகத்தில் வருவாய்த் துறை சிறப்பாக இயங்கியது.
அக்பரின் கஜானா செழிப்பாகவே இருந்தது.
எல்லோருக்கும்
ஒரே மாதிரியான வரி என்ற நியாயமில்லாத முறை அங்கு செயல்படுத்தப்படவில்லை. பல்வேறு
காரணிகளைப் பொருத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
அதாவது ஒரு
நிலத்துக்குச் சொந்தக்காரர் எவ்வளவு நிலத்தை வைத்திருக்கிறார்? அவரது மொத்த
நிலத்தில் எவ்வளவு விளைநிலம் உள்ளது? எவ்வளவு தரிசு நிலம் உள்ளது? அந்த
விளைநிலத்தின் மண் தரமானதா? அந்தப்பகுதியின் நீர்வளம் எப்படி? அருகிலேயே நீர்
ஆதராங்கள்
இருக்கின்றனவா? மழை அளவு எப்படி? அந்த விளைநிலத்தில் அவர் என்ன
பயிரிட்டிருக்கிறார்? அந்தப் பயிர் பணப்பயிரா? சாதாரணமானதா? விளையும்
பொருளின் தரம் எப்படி? நல்ல லாபத்தைப் பெற்றுத் தருமா? அந்த வருடத்தில்
மழை எப்படி? மழையினால்
47
சேதம் ஏற்பட்டதா? வேறு இயற்கைச்
சீரழிவுகள் உண்டானதா?
அந்தப் பகுதியின்
சந்தை எப்படி? விளைபொருள்கள் எப்படி விலைபோகும்?
விளைச்சலால்
கிடைக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கை அரசுக்கு வரியாகச் செலுத்தவேண்டும் என்பது
பொதுவான விதி. ஆனால் மேற்கூறிய காரணிகள் ஆராயப்பட்டு, அதற்கேற்ப வரி விதிக்கப்பட்டது.
இந்தத் திட்டம்
ஸப்ட் (zabt) என்றழைக்கப்பட்டது. வரி வசூல் செய்வதற்குரிய பொறுப்பு,
அந்தந்தப் பகுதிகளைச்
சேர்ந்த இனக்குழுத் தலைவருக்கோ, ஜமீன்தாருக்கோ வழங்கப்பட்டது.
அந்தந்த மாகாண
கவர்னர்களால் நியமிக்க திவான்கள் (மக்கள் நிர்வாகி), வரி வசூல் அறிக்கைகளை,
கணக்குகளை அரசிடம்
சமர்ப்பித்தார். இந்த நெட்வொர்க் சரியாகச் செயல்பட்டதால்,
நில
உரிமையாளர்களிடமிருந்து வரி வசூல் செய்வதென்பது கஷ்டமில்லாத செயலாக இருந்தது.
திவான்கள் வசூலித்த
மொத்தத் தொகையில் ஒரு சிறு பகுதியைப் பொது வளர்ச்சிப் பணிகளுக்கு எடுத்துக்கொண்டு, மீதித் தொகையை
அரசிடம் கட்டினர்.
எங்கெங்கே எப்படி
எப்படி வரி வசூல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அரசிடம் தெரிவிப்பதற்கென்றே
தனியாகச் செய்தியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
48
இந்தத் திட்டம்
வெற்றிகரமாக இயங்கியதால், அரசின் வருமானம் பெருமளவில் அதிகரித்தது.
அக்பர் தன்
ஆட்சியில் இஸ்லாமியச் சட்டங்களைப் (ஷரியத்) பின்பற்றினார். பெரும்பாலும்
நகரங்களில் இஸ்லாமியர்கள் வாழ்ந்தனர். ஹிந்துக்களும் மற்ற மதத்தினரும்
சுற்றியிருந்த ஊர்களிலும் கிராமங்களிலுமே வாழ்ந்தனர்.
மேலும் இந்த
இஸ்லாமியச் சட்ட நடைமுறை என்பது, நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று
அறிவிக்கப்பட்டிருந்தது.
கிரிமினல்
வழக்குகளில் மட்டும் முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாமியச் சட்டத்தின்படி
தண்டிக்கப்பட்டனர்.
அக்பர் தன்
ஆட்சிக்காலத்தில் சட்டங்களில் சிறு சிறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
அரசைப்
பொருத்தவரை மன்னர்தான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர். அவரது தீர்ப்பே இறுதியானது.
மன்னருக்குக்
கீழ் அடுத்த அதிகாரம் படைத்தவர் தலைமை நீதிபதி
(Chief Sadr). அவருக்குக் கீழ் மாகாண,
மாவட்ட, நகர நீதிபதிகள் (Qazis) வருவார்கள்.
அவர்களுக்கு உதவி செய்வதற்கென்றே நியமிக்கப்பட்டவர்கள் முஃப்திஷ் (Muftis).
49
குறைபாடுகள்
என்றால் ஒரு நீதிமன்றத்துக்கும் இன்னொரு நீதிமன்றத்துக்குமான உறவு என்பது
வரையறுக்கப்படவில்லை. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வழக்குகளை
மாற்றுவதில் பயங்கர குழப்பம் நிலவியது.
இஸ்லாமியச்
சட்டங்கள் கடுமையானது என்பதால் தண்டனைகளும் மிகக் கடுமையானதாகவே இருந்தன.
அக்பர் தலைநகரில்
இருக்கும் நாள்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் பரபரப்பாக இருப்பர். சரியான
நேரத்தில் அந்த நீதிமன்றத்தில் கூடுவர். அது மன்னருக்கான பிரத்யேக நீதிமன்றம்.
அங்கே நீதிபதி அக்பர்தான். அவர் விசாரிப்பதற்கென சில வழக்குகள்
ஒதுக்கப்பட்டிருக்கும்.
அவரே வழக்குகளை
விசாரிப்பார். சாட்சிகளிடம் கேள்விகள் கேட்பார். பின் தீர்ப்பை அறிவிப்பார்.
சாதாரண அபராதம், சிறைத் தண்டனை, கசையடி, கண்களைக்
குருடாக்குதல், மரண தண்டனை என்று எல்லா வகைத் தீர்ப்புகளும் அக்பரால் வழங்கப்பட்டிருக்கின்றன.
அக்பர் தன்
அரசில் மூன்று விதமான நாணயங்களை வைத்திருந்தார். தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள். இவற்றில் செப்பு நாணயங்கள்
அதிக அளவில் புழக்கத்தில் இருந்தன.
சந்தை முதல் வரி
செலுத்துவது வரை செப்பு நாணயங்களே
உபயோகப்படுத்தப்பட்டன.
50
தன் பேரரசு
முழுவதிலும் ஒரேவிதமான நாணய முறையைக் கொண்டு வர வேண்டுமென அக்பர் முயற்சி
எடுத்தார்.
எந்தவிதமான பழைய நாணயங்களையும்
அப்போதைய
நடைமுறையில் இருந்த நாணயங்களாக
மாற்றிக்கொள்ள
வசதிகள் செய்து கொடுத்திருந்தார். முகலாய மன்னர்களில் அக்பர் காலத்தில்தான் மிகச்
சிறப்பான நாணய நடைமுறை இருந்தது.
51
***
தலைநகரம் புதுசு
ஃபதேபூர் சிக்ரி
அக்பருக்கு நீண்ட
நாள்களாக ஆண் வாரிசே பிறக்கவில்லை. தனக்குப் பின் அரியணை ஏறுவதற்கு ஆள் இல்லையே
என்ற கவலை
அக்பரை வாட்டி
வதைத்தது. இந்தக் கவலையைத் தன் மதகுருவான சலிம் சிஷ்டியிடம் பகிர்ந்து கொண்டார்.
‘கவலைப்படாதே, விரைவில் உனக்கு ஆண் வாரிசு பிறக்கும்’ என்று அவர் ஆசீர்வாதம் செய்தார். அதன்படி, அக்பரின்
மனைவியான ஜோதா பாய்க்கு (அம்பர் அதாவது ஜெய்ப்பூர் சமஸ்தான இளவரசி) ஓர் ஆண்
குழந்தை
பிறந்தது. அந்தக்
குழந்தைதான் அக்பருக்குப் பின் அரியணை ஏறிய ஜஹாங்கீர்.
சலீமுக்குப்
பிறகு அக்பருக்கு மேலும் இரண்டு ஆண் வாரிசுகள் பிறந்தன (முராட், தானியல்).
52
[படம்: ஃபதேபூர் சிக்ரியில் ஒரு கட்டடம்]
53
அக்பர் மிகவும்
சந்தோஷமாக, தன் மதகுருவைச் சென்று சந்தித்தார். அப்போது மதகுரு இன்னொரு யோசனை கூறினார்.
‘முகலாயப் பேரரசின் தலைநகரை இந்த இடத்துக்கு மாற்ற வேண்டும். இங்கே ஒரு புதிய
நகரைக் கட்ட வேண்டும்.’
மதகுரு சொன்ன
இடம் ஃபதேபூர் சிக்ரி. அக்பர் சிறிதும் யோசிக்கவில்லை. தன் குருவின் கட்டளைப்படி, ஒரு புதிய தலைநகரை
உருவாக்கத் திட்டமிட ஆரம்பித்தார்.
ஆக்ராவிலிருந்து
நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஃபதேபூர் சிக்ரியில் புதிய பிரம்மாண்டமான
அரண்மனை கட்டப்பட்டது. 1569ல் இது முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.
1571 முதல் இந்த நகரம் முகலாயர்களின் தலைநகரமாகச் செயல்பட ஆரம்பித்தது. அக்பர், ஃபதேபூர்
சிக்ரியை, முகலாயப்
பேரரசின் தெற்குப் பகுதிகளையும், வடக்குப் பகுதிகளையும் இணைக்கும் ஒரு
மையமாகக்
கருதினார்.
அங்கிருந்து
நிர்வாகம் செய்வது எளிதாக இருக்கும் என்று நினைத்தார். மையத்தில் இருப்பதால், அங்கு இருந்து
எங்கு வேண்டுமானாலும் சுலபமாகச் சென்று வரவும் முடிந்தது. அதன் அருகிலுள்ள
மலைப்பகுதிகள், எதிரிகள் தாக்க வந்தால் பதுங்குவதற்கேற்ற வசதிகளைக் கொண்டிருந்தது.
54
[படம்: புலந் தர்வாசா]
55
கட்டுமானப்
பணிகளுக்குச் சிவப்புக் கற்கள் பயன்படுத்தப்பட்டன. அங்கிருந்த மாளிகைகள் எல்லாம்
குஜராத், ராஜஸ்தான், வங்காள
கட்டடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டன. இஸ்லாமியக் கலாசாரமும் கூடவே ஹிந்து, ஜெயின்
கலாசாரத்தின் பிரதிபலிப்புகளும்
அந்தக்
கட்டடங்களில் தெரிந்தன.
ஃபதேபூர்
சிக்ரியிலிருந்த சில முக்கியமான சின்னங்களைப் பார்க்கலாம்.
நௌபத் கானா -
இந்தக் கட்டடம் அரண்மனைக்கு வெளியே அமைந்திருந்தது. இங்கே ஒரு பெரிய டிரம்
அமைக்கப்பட்டிருந்தது. யாராவது முக்கியமானவர்கள் வந்தால் இந்த டிரம்மை ஒலித்து
அறிவிப்புச் செய்வார்கள்.
திவான்-ஐ-அம்
நிறைய தூண்களைக் கொண்டது. இங்குதான் அக்பர் பொதுமக்களைச் சந்தித்து உரையாடினார்.
திவான்-ஐ-காஸ் -
இந்த மாளிகையில் அக்பர், விருந்தினர்களையும் மற்ற பிரமுகர்களையும்
சந்தித்தார். இந்த மாளிகையின் மையத்தில் அமைந்துள்ள ஒரு தூண் கலை வேலைப்பாடுகள்
நிறைந்தது. கட்டடத்தின் விட்டத்தையும் தூணையும் இணைக்கும் விதமாக
அமைக்கப்பட்டிருக்கும் முப்பத்தாறு தாங்கிகள் பார்ப்பதற்கு மிக
அழகாக இருக்கும்.
பஞ்ச் மஹால்
ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்தக் கட்டடம், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு
அடுக்கும் கீழுள்ள அடுக்கை விடச் சிறியது.
56
ஐந்தாவது மேல்
அடுக்கு கோபுரம் போன்ற அமைப்பைக் கொண்டது.
சர் சமன் குளம் -
இந்தப் பெரிய குளத்தின் நடுவில் ஒரு மண்டபம் இருக்கிறது. குளத்தின் நான்கு
புறங்களிலிருந்தும் மண்டபத்துக்குச் செல்ல சிறிய பாலங்கள் உண்டு.
புலந் தர்வாசா
என்றால் பெர்சிய மொழியில் மிகச் சிறப்பான வாசல் என்று பொருள். அந்த
அர்த்தத்துக்கேற்ப பிரம்மாண்டமாகவே அமைந்துள்ளது இந்த வாசல். நாற்பது மீட்டர்
உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடம்
அக்பர் கட்டிய
முக்கியமான சின்னங்களுள் ஒன்று. 1569ல் ஆரம்பிக்கப்பட்டு,
1588ல் கட்டி
முடிக்கப்பட்டது. முழுக்க முழுக்கச் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டது.
ஜமா மஸ்ஜித் -
அக்பர் கட்டிய மசூதி. இஸ்லாமிய மரபுப் படியும், ஆச்சரியப்பட வைக்கும் வேலைப்பாடுகளுடனும்
உருவாக்கப்பட்டது.
இவைதவிர அக்பரின்
முக்கிய அமைச்சரான பீர்பாலுக்கென தனி மாளிகை ஒன்று கட்டப்பட்டது. அதேபோல, அக்பர் தன் மனைவி
ஜோதாபாய்க்கு, குஜராத்தியர்களின் கலாசாரப் படி ஒரு மாளிகை கட்டிக் கொடுத்தார். அக்பரது
மதகுரு சலிம் சிஷ்டியின் நினைவிடம் அங்குதான் உள்ளது.
1585ல் அக்பர் ஆக்ராவை மீண்டும் தன் தலைநகராக அறிவித்தார். காரணம், ஃபதேபூர்
சிக்ரியில் நிலவிய நீர்ப் பற்றாக்குறை. அதனால் அங்கிருந்து தொடர்ந்து ஆட்சி
57
புரிவதென்பது
இயலாமல் போனது. அக்பருக்குப் பின் ஃபதேபூர் சிக்ரிக்கு யாரும் முக்கியத்துவம்
கொடுக்கவில்லை.
தற்போது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஃபதேபூர் சிக்ரி, உலகின் முக்கியமான புராதன சின்னங்களுள் ஒன்றாக
யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
58
***
மதம் புதுசு
தீன்-இ லாஹி (din-i llahi)
அக்பர் தன்
பேரரசில் வாழ்ந்த அனைத்து மதத்தினர்களையும் மதித்தார். எல்லா மதத்தினரோடும்
நெருங்கிப் பழகினார். தன் பேரரசில்
பல்வேறு
மதத்தினருக்கும் பதவிகளை வழங்கி கெளரவித்தார்.
அது மட்டுமன்றி, இஸ்லாமியர்களுக்கும்
பிற மதத்தினர்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளைக் களைய நினைத்தார். ராஜ்புத்திர
இனத்தைச் சார்ந்த
ஹிந்துப் பெண்களை, திருமணமே செய்து கொண்டார்.
கத்தோலிக்கத்
திருச்சபைகள் எந்தப் பிரனையுமின்றி செயல்பட்டன. அக்பரின் பேரன்கள் மூன்று பேர்
கிறிஸ்தவர்களாக மாறியதாகவும், பின்னர் மீண்டும் இஸ்லாமுக்கே திரும்பியதாகவும்
தகவல் உண்டு.
59
தன் மக்களின் மத
வழிபாடுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. மக்கள் தம் மதத்தைப்
பற்றிச் சுதந்தரமாகப் பேச அனுமதிக்கப்பட்டனர்.
ஃபதேபூர்
சிக்ரியில், Ibadat Khana என்றொரு அரங்கை அக்பர் கட்டினார். அவ்வப்போது
அங்கே கூட்டங்கள் நடத்தினார். கூட்டங்கள் என்றுகூட சொல்லக்கூடாது, விவாதங்கள் என்றே
சொல்லவேண்டும்.
ஒவ்வொரு
மதத்தினரும் தங்களின் கடவுளர்களைப் பற்றி, தத்துவங்களைப் பற்றி, மதத்தின் சிறப்பைப் பற்றி, அதன் நெறிகளைப்
பற்றி நீண்ட உரையாற்றினர். உரை, அக்பர் கேட்கும் சந்தேகங்கள், கேள்விகளுக்கேற்ப
விவாதங்களாகிப் போவதும் உண்டு. அவரது அமைச்சர்களும் பல்வேறு விதமான சந்தேகங்களை
எழுப்புவர். விளக்கங்களைக் கேட்பர்.
எல்லா மதத்திலும்
அக்பர் பல்வேறு நல்ல விஷயங்களைக் கண்டார். அதே சமயம் குறைபாடுகளையும் கண்டார்.
எந்த மதமும் அக்பரது மனத்தைத் திருப்திப்படுத்தவில்லை, இஸ்லாம் உள்பட. என்ன செய்யலாம் என்று தம்
அமைச்சர்களோடு உட்கார்ந்து விவாதித்தார்.
அப்போது அபுல்
ஃபாசல் என்ற அமைச்சர், சொன்ன யோசனை அக்பரை மிகவும் யோசிக்க வைத்தது.
‘ஷா-இன்-ஷா”*, நீங்கள் ஏன் ஒரு மதத்தை உருவாக்கி அதற்குத் தலைவராக இருக்கக் கூடாது?’
_____________________________________________________________
ஷாஇன்ஷா’ என்றால்
அரசர்களின் அரசர் என்று பொருள்.
60
தன் அமைச்சரவை
சகாக்களோடும் பிற மதத்தினர்களோடும் இதைப் பற்றி தொடர் விவாதங்கள் நடத்தினார்.
நாள்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ அல்ல, வருடக்கணக்கில். அதன்படி ஒரு புதிய மதம்
உருவானது.
தீன்-இ லாஹி. 1581ல் அக்பர்
உருவாக்கிய மதம்.
அக்பர் இந்த மதம்
பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோது, இஸ்லாம் மதத்தினரிடையே பெரும் சலசலப்பு
எழுந்தது. எதிர்ப்பு உண்டானது. இஸ்லாமுக்கு எதிரான செயலில் அக்பர் ஈடுபடுகிறார்
என்று குரல்கள் எழுந்தன.
தீன்-இ லாஹி
எப்படிப்பட்ட மதம்?
தீன்-இ லாஹிக்கு
அக்பர் கொடுத்துள்ள விளக்கம் ‘உண்மையின் மதம்.’ ஹிந்து மதம், இஸ்லாம் ஆகியவற்றிலுள்ள பல நல்ல விஷயங்களை
அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.
கிறிஸ்தவம், ஜெயின், ஜோராஸ்டிரினிசம் – ஆகிய
மதங்களிலிருந்தும் சில கொள்கைகள் இந்த மதத்தில் இணைக்கப்பட்டன. தன்னை, தன் ஆன்மாவை
உணரும் தன்மை, தத்துவ நிலை, இயற்கையான வழிபாடு
போன்றவை தீன்-இ
லாஹியின் அடிப்படை.
கடவுள் இல்லை, தேவதூதர்கள்
யாரும் கிடையாது என்பது தீன்-இ லாஹியின் நம்பிக்கை. இந்த விஷயம்தான்
இஸ்லாமியர்களைக் கொதிப்படையச் செய்தது. அக்பருக்கு எதிராக விமரிசனங்களை எழச்
செய்தது.
61
ஆனால் அக்பர், தீன்-இ
லாஹியைத்தான் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அக்பருக்கு
அடுத்தபடியாக அவரது அமைச்சரான பீர்பால் மட்டுமே தீன்-இ லாஹியை உண்மையாகப்
பின்பற்றினார். அவரது இன்னொரு அமைச்சரான மன் சிங், தீன்-இ
லாஹியை ஏற்றுக்
கொள்ளவே இல்லை.
மொத்தமாகப்
பார்த்தால் தீன்-இ லாஹியை ஏற்றுக் கொண்டவர்கள் மொத்தம் ஐம்பது பேர்கூட இருக்காது.
அக்பருக்குப் பின் தீன்-இ லாஹியும் மறைந்துபோனது.
62
***
மீராவின் கதை
மீரா. இந்தப்
பெயரைக் கேட்ட உடனேயே தம்புராவை மீட்டியபடியே கண்ணன்மீது உருகி உருகிப் பாடல்கள்
பாடும் ஒரு பெண் பக்தை நினைவுக்கு வருகிறார் அல்லவா.
உண்மையில் மீரா
வாழ்ந்த காலம் என்பது பேரரசர் அக்பர் வாழ்ந்த காலம்தான். அக்பரினால் மீராவின்
வாழ்வில் ஒரு பெரிய புயலே வீசியது. அந்தச் சம்பவத்தைப் பார்க்கலாம்.
மீராபாய் என்ற
பெயருடைய மீரா, ராஜஸ்தானிலுள்ள மெத்ரா என்ற ஊரில் பிறந்தாள். குழந்தை மீரா, சிறந்த அழகுடனும், மிகச் சிறந்த
அறிவுடனும் வளர்ந்தாள். பக்தியில் அவளுக்கு அதிக நாட்டம் இருந்தது.
குறிப்பாக கண்ணன்
மீது. எப்போதும் ஒரு கண்ணன் சிலையைத் தன்னுடனேயே
63
வைத்திருப்பாள்.
அவளுக்கான விளையாட்டுச் சாமான், பூஜைக்குரிய பொருள் எல்லாமே அந்தச் சிலைதான்.
வளர வளர கண்ணன்
மீதான பக்தி என்பது காதலாகிப் போனது. மீராவைப் பெண் கேட்டு பலர் வந்தனர். ஆனால்
அவள் யாரையும் மணமுடித்துக்கொள்ள சம்மதிக்கவில்லை. காரணம்,
கண்ணன் மீது கொண்டிருந்த
காதல். கண்ணன் மீது மீரா உருகி உருகிப் பாடும் பாடல்கள்
எல்லாம் கொஞ்சம்
கொஞ்சமாகச் சுற்று வட்டாரங்களிலெல்லாம் பரவ ஆரம்பித்தன.
மீராவி்ன்
பதினாறாவது வயதில், சித்தூர் மகாராஜா போஜ் ராஜ் அவளைப் பெண் கேட்டு
வந்தார். போஜ் ராஜூம் மிகச் சிறந்த கிருஷ்ண பக்தர். அவரது முதல் இரண்டு மனைவியரும்
பக்தியில் நாட்டமின்றி இருந்தனர். மீராவின் பக்தியைக் கேள்விப்பட்ட போஜ் ராஜ், அவளது தந்தையை
நாடினார்.
மீராவின்
பெற்றோர், முடிவை மீராவிமே
விட்டுவிட்டனர். கண்ணனே என் கனவில் வந்து திருமணம் செய்துகொள்ள அனுமதி
வழங்கிவிட்டான் என்ற மீரா, போஜ் ராஜை மணந்து கொண்டாள்.
போஜ் ராஜ்
மீராவின் பக்திக்கோ, பூஜைகளுக்கோ, பஜனைகளுக்கோ எந்தவிதத் தடையும் செய்யவில்லை.
வசதிகள் செய்து கொடுத்தார். கோயில் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அங்கு மீராவின்
வழிபாடுகளுக்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். மீராவின் புகழ், இந்தியாவெங்கும்
பரவியது.
64
அக்பரின் அரசவைப்
பாடகரான தான்சேனும் மீராவைப் பற்றிக் கேள்விப்பட்டார். சித்தூர் சென்று மீராபாயின்
பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு அவளது பாடல்களையும் கேட்டு வந்தார்.
தான்சேனால்
ஆர்வத்தை அடக்கமுடியவில்லை. நேராக அக்பரைச் சந்திக்கச் சென்றார்.
‘பேரரசருக்கு வணக்கம். தங்களிடம் ஓர் அற்புதமான செய்தியைப் பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன்.’
‘சொல்லுங்கள் தான்சேன்.’
‘சித்தூர் சென்றிருந்தேன். அங்கே மகாராஜா போஜ் ராஜின் மனைவி மீராபாயைக்
கண்டேன். அவள் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தை. அவள் கிருஷ்ணன் மீது பாடும் பாடல்களைக்
கேட்டால் மெய்சிலிர்த்து விடுவீர்கள். அவ்வளவு அருமையான குரல். குரல் நிறைய
தெய்வீகம். அப்படியே உருக்கி விடுகிறாள்.’
தான்சேன் சொல்லச்
சொல்ல அக்பருக்கும் மீராவைக் காண வேண்டும், அவளது பாடல்களைக் கேட்க வேண்டும் என்ற ஆசை
எழுந்தது. தான்சேன் மீராவின் பாடல்கள் சிலவற்றைப் பாடிக் காட்டினார். அக்பர்
அசந்துவிட்டார். அடுத்தவர் பாடும்போதே இந்தப் பாடல்கள் இப்படி
மயக்குகிறதே, மீராவே பாடிக்
கேட்டால் எப்படியிருக்கும்? அக்பர் ஆர்வமானார்.
‘தான்சேன், நாம் எப்போது சித்தூர் போகலாம்?’
65
அக்பரிடமிருந்து
இப்படி ஒரு கேள்வியைத் தான்சேன் எதிர்பார்க்கவில்லை. காரணம் சித்தூர் மகாராஜா
முகலாய
எதிர்ப்பாளர்.
அங்கேயே சென்று மீராவைக் காண்பதென் பது மிகவும் ஆபத்தான விஷயம்.
‘பேரரசே வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.’
‘பயப்படாதீர்கள் தான்சேன். நான் சித்தூருக்குப் படைகளோடு போர்த் தொடுக்க, மன்னராகப்
போகவில்லை. மீராவைக் காண்பதற்காக, அவளுடைய பாடல்களைக் கேட்பதற்காக ஒரு சாதாரண
பக்தனாகப் போகிறேன். நீங்கள்தான் என்னுடன் வர வேண்டும்.’
தான்சேனும்
அக்பரும் சித்தூரை நெருங்கினர். பக்தர்கள் போல வேடமணிந்து கொண்டு சித்தூர்
அரண்மனைக்குள் நுழைந்தனர். அப்போதுதான் மீராவின் பஜன் ஆரம்பமாகியிருந்தது.
இருவரும் பக்தர்களோடு பக்தர்களாகச் சென்று அமர்ந்து கொண்டனர்.
மண்டபத்தின்
நடுவில் அமர்ந்திருந்த மீரா பாட ஆரம்பித்தாள். பக்திப் பெருக்கில் ஆட
ஆரம்பித்தாள். மெல்ல மெல்ல அக்பரின் கண்களில் நீர் கசிய ஆரம்பித்தது. அந்தக்
குரலின் தெய்வீகத்தில் உருகிப் போனார். பாடல்களின் பொருளிலும் இசையிலும்
இனிமையிலும் மூழ்கிப்
போனார்.
பூஜைகள்
முடிந்தன. கலந்துகொண்ட அத்தனை பக்தர்களுக்கும் மீரா பிரசாதம் வழங்கிக்
கொண்டிருந்தாள். அக்பரும் தான்சேனும் வரிசையில் நின்று கொண்டு
66
இருந்தனர். மீராவைப்
பாராட்டும் விதமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று அக்பரது மனம் படபடத்தது.
அக்பரின் முறை
வந்தது. மீராவை அருகில் தரிசித்து பிரசாதம் வாங்கிக்கொண்ட அக்பர், கொஞ்சம்
தள்ளியிருந்த கிருஷ்ண விக்ரகத்தின் காலடியில் ஒரு நகையைக் கழற்றி வைத்தார்.
தான்சேனும் அக்பரும் டெல்லிக்குத் திரும்பினர்.
அது சாதாரண
நகையல்ல. ஒரு சாம்ராஜ்யத்தையே விலைக்கு வாங்கும்படியான மதிப்பு கொண்ட முத்து மாலை.
சித்தூர் அரண்மனை
பரபரப்பானது. எப்படி வந்தது இந்த முத்துமாலை? இவ்வளவு விலையுயர்ந்த மாலையைக் காணிக்கையாகக்
கொடுத்துவிட்டுப் போகுமளவுக்கு யார் வந்து போயிருப்பார்கள்? மகாராஜா போஜ்ராஜ்
தனக்குள்ளேயே கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். அதற்குள் அவனது ஒற்றர்கள் அங்கு
வந்து நின்றனர்.
‘வணக்கம் மகாராஜா, முகலாயப் பேரரசர் அக்பர் மாறுவேடத்தில் இங்கு
வந்து போயிருக்கிறார். மகாராணியின் பூஜையில் கலந்துகொண்டு போயிருக்கிறார்.’
போஜ் ராஜூக்கு
ஆத்திரம் அதிகமானது. நேராக மீராவிடம் சென்றான். அக்பர் வந்து போனதை ஏன்
சொல்லவில்லை என்று கேள்விகளை எழுப்பினார். மீராவின் மேல் சந்தேகப்பட்டு தகாத
வார்த்தைகளால் பேசினார்.
67
மீராவுக்கு
ஒன்றுமே புரியவில்லை. உடைந்துபோனாள். ‘என் நடத்தையின் மேல் சந்தேகப்பட்ட உங்களுடன்
இனிமேலும் இருக்க மாட்டேன்’ என்று அழுதபடியே கூறிய மீரா, அரண்மனையை
விட்டுக் கிளம்பினாள்.
மீராவின்
வார்த்தைகள் போஜ் ராஜைப் பாதித்தன. உடனே அவர், ‘மன்னித்து விடு மீரா. கோபத்தில்
அறிவிழந்துவிட்டேன். வெளியே போய்விடாதே’ என்று கெஞ்ச ஆரம்பித்தார். ஆனால் மீரா
அரண்மனையிலிருந்து கிளம்பி நேராக பிருந்தாவனத்துக்குச் சென்றாள்.
அவளோடு பக்தர்கள்
சிலரும் சென்றனர்.
விஷயம் சித்தூர்
முழுவதும் பரவியது. மக்கள் மகாராஜாவை வெறுத்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர். அடுத்த
சில நாள்களில் அக்பருக்கும் விஷயம் தெரியவந்தது. கோபத்தில் கொதித்த அக்பர்
உடனடியாக போஜ் ராஜூக்கு ஓர் ஓலை அனுப்பினார்.
‘மீராவின் தெய்வீக இசையைக் கேட்கவும், பூஜைகளைக் காணவுமே நான் சித்தூர் வந்தேன்.
அதுவும் ஒரு பக்தனாக மட்டுமே. கிருஷ்ணருக்குக் கொடுக்கும் காணிக்கையாகவே அந்த
முத்துமாலையை விக்கிரகத்தின் காலடியில் வைத்துவிட்டு வந்தேன். என் மனத்தில் எந்தக்
களங்கமும்
இல்லை. ஆனால் என்
வருகையைக் காரணம் காட்டி மீராபாயின் மேல் பழி சுமத்தியதை வன்மையாகக்
கண்டிக்கிறேன். இது என்னையும் அவமானப்படுத்துவதாக உள்ளது. சித்தூர் மகாராஜா தன்
தவறை உணர்ந்து
68
மகாராணி மீராபாயை
மீண்டும் அரண்மனைக்கே அழைத்துவர வேண்டும். இல்லையேல் முகலாயர்கள் படையெடுத்துவர
வேண்டிய அவசியம் ஏற்படும். அதை உண்டாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நல்லது
நடக்க
அல்லாவைப்
பிரார்த்திக்கிறேன்.’
அக்பரின் ஓலையைக்
கண்ட போஜ் ராஜ் ஆடிப் போனார். மறு நிமிடமே பிருந்தாவனுக்குப் புறப்பட்டுச்
சென்றார். மீராவைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். நிலைமையை எடுத்துக்கூறி
அரண்மனைக்கே திரும்பி வந்துவிடுமாறு மீராவிடம் கெஞ்சினார். மீராவும் சம்மதித்தாள்.
ஆனால்
ஒரே ஒரு
நிபந்தனையுடன்.
‘நான் மீண்டும் சித்தூருக்கு வருகிறேன். ஆனால் மகாராணியாக அல்ல, கண்ணனின் பக்தை
மீராவாக. சம்மதமா?’
போஜ் ராஜ்
சம்மதித்தார். சித்தூருக்குத் திரும்பிய மீராபாய், அரண்மனையில் இருந்த கோயிலில் பக்தையாகக்
குடியேறி தன் பணிகளைத் தொடர ஆரம்பித்தாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட அக்பர், மனம்
மகிழ்ந்தார்.
69
***
பீர்பாலின் நிஜக்
கதை
அக்பர்
அவ்வப்போது தன் அரசவையில் வித்தியாசமான கேள்விகளைக் கேட்பார். அப்போது பதில்
அளிக்க முடியாமல் அவரது அமைச்சர்கள் திணறுவார்கள். அப்படிப்பட்ட சமயங்களில்
சமயோசிதமாகப் பதில் சொல்லி காப்பாற்றுபவர் அமைச்சர் பீர்பால் மட்டுமே.
‘ஆக்ராவில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?’
ஒருநாள் அக்பர்
இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார். யாரால் என்ன பதில் சொல்ல முடியும் அல்லது ஓடிச்
சென்று காக்கைகளைத்தான்
எண்ணிப் பார்க்க
முடியுமா? மனிதர்கள்
என்றால் எண்ணி விடலாம். கால்நடைகளைக் கூட எண்ணிவிடலாம். எத்தனை குதிரைகள் இருக்கின்றன
என்றால் ராணுவ அமைச்சரிடம் கேட்டு கணக்கு கொடுக்கலாம்.
70
எல்லாக்
காக்கைகளும் ஒரே மாதிரியாக அல்லவா இருக்கின்றன, பறவைகளை எப்படி எண்ணுவது?
திகைத்துப்
போனார்கள். அக்பர் மட்டும் விஷயம் தெரியாதவரா
என்ன? இப்படிப் பல
சோதனைகளைக் கொடுப்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்கு. பீர்பால் அமைதியாக
உட்கார்ந்திருந்தார். அவரிடமிருந்து
பதிலை
எதிர்பார்த்த அக்பர், ‘என்ன பீர்பால், என்னுடைய கேள்விக்கு உங்களுக்குக் கூட விடை
தெரியவில்லையா?’ என்றார்.
பீர்பால் எழுந்து
நின்று, ‘விடையைச் சொல்லவா?’ என்று கேட்டார்.
‘நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் பதில் தவறாக இருந்தால் கடும்
தண்டனை கொடுப்பேன்’ என்று அக்பர் மிரட்டினார்.
‘தெரியும் மன்னா. என்னுடைய விடை இதுதான், நம் ஆக்ராவில் 12,224 காக்கைகள் உள்ளன’ என்று ஒரே போடாகப் போட்டார்.
‘அது என்ன கணக்கு? உங்களுக்கு எப்படித் தெரியும்?’
‘நான் சென்ற மாதம்தான் எண்ணிப் பார்த்தேன். சந்தேகமாக இருந்தால் ஆள்களை வைத்து
எண்ணிக் கொள்ளுங்கள்.’
அக்பர்
சளைக்கவில்லை.
71
‘எண்ணிப் பார்க்கச் சொல்லுவேன். எண்ணிக்கையில் தவறு இருந்தால் தண்டனை கடுமையாக
இருக்கும்’ என்று மிரட்டினார்.
‘அதெப்படி மகாராஜா, காக்கைகள் பறவைகளாயிற்றே. அதற்குள் எத்தனைக்
காக்கைகள் ஆக்ராவைவிட்டு போய் விட்டனவோ? எத்தனை புதிதாக வந்து சேர்ந்திருக்கின்றனவோ? அதனால் நான்
சொன்னதில் கூடக் குறைய இருக்கத்தான் செய்யும். நான் சொன்ன அந்த 12,224
காக்கைகளை
உங்களால் தேடிப்பிடித்து எண்ணமுடிந்தால் எண்ணிக் கொள்ளுங்கள்.’
பீர்பாலின்
சாதுர்யமான பதிலில் வாயடைத்துப் போனார் அக்பர்.
இதேபோல, அக்பருக்கும்
பீர்பாலுக்கும் இடையே நடந்தவையாகப் பல சம்பவங்கள் கதைகளாகக் கூறப்படுகின்றன.
அவற்றில் பெரும்பாலும் கற்பனையே.
1528ல் மத்தியப்பிரதேசத்தில் கோஹரா என்ற கிராமத்தில் பிறந்தவர் பீர்பால்.
உண்மையில் பீர்பாலின் நிஜப் பெயர் மகேஷ் தாஸ். சிறந்த அறிவும், மதிநுட்பமும்
உடைய பீர்பால் மீது அக்பர் தனிமதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பது உண்மை.
பீர்பாலுக்கு நகைச்சுவை
உணர்வு அதிகம்.
அதனால் அரசவையைப் பலமுறை கலகலப்பாக்கியிருக்கிறார்.
மகேஷ் தாஸ், அக்பரது அவைக்கு
வந்து சேர்ந்த நிஜக்கதை மிகவும் சுவாரசியமானது.
72
அக்பர் ஒருமுறை
வேட்டைக்குச் சென்றிருந்தார். அங்கு மக்கள் கூட்டமாக நின்று ஒருவரது பேச்சைக்
கேட்டுக்கொண்டிருந்தனர். அக்பரும் அவரது பேச்சைக் கேட்டார்.
அந்தப் பேச்சில்
நகைச்சுவை நிரம்பியிருந்தது. குறும்பு கலந்திருந்தது. அதேசமயத்தில் அறிவுபூர்வமான
விஷயங்களும் இருந்தன. பேசியவர் மகேஷ் தாஸ்தான்.
‘உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் எப்போது
வேண்டுமானாலும் என்னை ஆக்ராவின் அரண்மனையில் வந்து சந்திக்கலாம். இது என் மோதிரம்.
இதைக் காட்டினால் நீங்கள் என்னைச்
சந்திக்க அனுமதி
கிடைக்கும்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் அக்பர்.
மகேஷ் தாஸ்
ஏழைமையான குடும்பத்தில் பிறந்தவர். வருமானம் இல்லை. சரி, அக்பரைச் சென்று சந்திக்கலாம் என்று
கிளம்பினார். ஆக்ரா அரண்மனையை அடைந்தார். வாசலிலேயே இரண்டு காவலர்கள் மறித்து
என்னவென்று கேட்டனர்.
‘மன்னரைச் சந்திக்க வந்திருக்கிறேன்.’
‘என்ன மன்னரையா? நீயா?’ - மகேஷ் தாஸின் பரிதாபமான தோற்றமும், கிழிந்த உடைகளும்
காவலர்களை அப்படிக் கேட்க வைத்தன.
‘ஆமாம்’ என்ற பீர்பால், அக்பர் அளித்த மோதிரத்தை எடுத்துக் காட்டினார்.
73
காவலர்கள் அசந்து
போனார்கள். எப்படியும் மன்னரைச் சந்தித்துவிட்டு பெரிய சன்மானத்துடன்தான் இந்த ஆள்
திரும்புவான் என்று கணக்குப் போட்டனர்.
‘சரி, உன்னை உள்ளே
அனுமதிக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. மன்னர் அளிக்கும் சன்மானத்தில் பாதியை
எங்களுக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா?’ என்று கேட்டனர்.
‘சம்மதம்’ என்று சொல்லிவிட்டு அக்பர் இருந்த அவையைச் சென்றடைந்தார் மகேஷ் தாஸ். அவரை
மீண்டும் கண்டதில் அக்பருக்குப் பெரும் மகிழ்ச்சி.
‘உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்’ என்றார்.
‘எனக்கு நூறு சாட்டையடிகள் வேண்டும் மன்னா’ என்றார் மகேஷ் தாஸ். அவையில்
இருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. இவர் இப்படி விஷமமாகச் சொல்கிறார் என்றால்
உள்ளே வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்துகொண்ட அக்பர்,
‘என்ன நடந்தது சொல்லுங்கள்’ என்றார். மகேஷ் தாஸ் வாயில் காவலர்களுக்கு
அளிக்கவேண்டிய பாதி சன்மானத்தைப் பற்றிச் சொன்னார். அந்தக் காவலர்கள்
அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஐம்பது சாட்டையடிகள் வழங்கப்பட்டன.
மகேஷ் தாஸுக்கு
அக்பரின் அமைச்சரவையிலேயே வேலை கொடுக்கப்பட்டது. அக்பர், அவருக்கு பீர்பால்
74
என்ற புதிய
பெயரைச் சூட்டினார். தத்துவம், மதம், அரசியல், சட்டம், நகைச்சுவை என்று எந்தவிதமாகக் கேள்வி
கேட்டாலும் அதற்கு நகைச்சுவையோடு பதில் சொல்ல பீர்பால் காத்திருப்பார்.
பீர்பால் ஒரு
நல்ல கவிஞர். பிரம்மா என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய கவிதைகள், ராஜஸ்தான்
மாநிலத்திலுள்ள பரத்பூர் அருங்காட்சியகத்தில் இப்போதும் காணக்கிடைக்கின்றன.
பலமுறை முகலாயப்
படைகளோடு போர்க்களங்களுக்குச் சென்றுள்ள பீர்பால், 1586ல் கொல்லப்பட்டார். போரில் அல்ல, எதிரிகள் சிலரால்
. விஷயத்தைக் கேள்விப்பட்ட அக்பர் அந்தத் துக்கத்திலிருந்து மீண்டு வர பல நாள்கள்
பிடித்தன.
அக்பரின் அவையில்
நவரத்தினங்கள் என்றழைக்கப்பட்ட திறமை வாய்ந்த அமைச்சர்கள் ஒன்பது பேர் இருந்தனர்.
அந்த ஒன்பது பேர்களுள் ஒருவர் பீர்பால்.
அபுல் ஃபாசல் -
இவர் அக்பரின் முதன்மை ஆலோசகர். போர் முதல் பொருளாதாரம் வரை எந்த முக்கியமான
முடிவையும் எடுக்கும் முன் இவரைத்தான் ஆலோசனை கேட்பார் அக்பர். அக்பர் கால முகலாய
அரசை விளக்கும் நூலான ‘அக்பர் நாமா’ இவரால்தான் எழுதப்பட்டது.
ஃபைஸி (Faizi) - சிறந்த கவிஞர்.
நள தமயந்தியின் காதல் வரலாற்றை விளக்கும், நள் உ தமன் என்ற கவிதை நூலை சமஸ்கிருதத்தில்
வழங்கியுள்ளார்.
75
மியான் தான்சேன்
- மிகச் சிறந்த இசைக்கலைஞர். ஹிந்துவாக
இருந்து
இஸ்லாமியராக மாறிய இவரது பாடல்கள் என்றால் அக்பருக்கு உயிர்.
அப்துல் ரஹ்மான்
கான்-ஐ-கன்னா- மிகச் சிறந்த நிர்வாகி. பல மொழிக் கவிஞர்.
ராஜா தோடர் மால்
- திறமையான போர்த் தளபதி. அக்பரின் கஜானாவைத் தன் நிதி நிர்வாகத் திட்டங்களினால்
நிரப்பியவர்.
ராஜா மன் சிங் -
அக்பரின் நம்பிக்கைக்குரிய தளபதி. முகலாயப் பேரரசை விரிவுபடுத்தியதில் பெரும்பங்கு
உடையவர். ஜஹாங்கீர் காலத்திலும் போர்க்களத்தில் எதிரிகளுக்குச் சவாலாக இருந்தவர்.
ஃபகிர்
அஸியோ-தின் (Fakir Aziao-Din) அரசின் உள் விவகாரங்களில் முதன்மை ஆலோசகராகச்
செயல்பட்டவர்.
முல்லா தோ பியாஸா
- இவரும் பீர்பாலைப் போன்றே நகைச்சுவைத் திறன் கொண்டவர். அக்பரோடு சேர்ந்து
நிர்வாகத்தில் பெரும்பங்கு வகித்தார்.
76
***
அக்பருக்கு வயது 64
பத்தொன்பது
வயதில் அரியணை ஏறி, இந்தியாவில் பாதிக்கு மேல் பிடித்தாயிற்று.
இப்போது வயது அறுபதைத் தாண்டி விட்டது.
ஆஜானுபாகுவான
தோற்றம். ஐந்து அடி, ஏழு அங்குல உயரம். பெரிய முகம், அதில் சற்றே
சிறிய நாசி. சீர்படுத்தப்பட்ட மீசை. கூர்மை
யான பார்வை, அதிர்வுகளை
ஏற்படுத்தும் குரல். வன விலங்குகளையும் ‘வந்து பார்’ என்று நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வீரம்.
இத்தனை வருடங்கள்
போர் போர் என்றே காலம் ஓடிவிட்டது. அந்த உடம்புக்கு, முக்கியமாக மனத்துக்கு ஓய்வு வேண்டாமா?
அக்பர் ஆக்ராவின்
அரண்மனையில் உட்கார்ந்திருந்தார். பழைய நினைவுகளை எல்லாம் தனக்குள் அசை போட்டுக்
கொண்டிருந்தார்.
77
வாழ்க்கையில்
எந்தப் பிரச்னையும் இல்லை. மூன்று ஆண் வாரிசுகள். ஜஹாங்கீர், முராட், தானியல். விதியை
என்ன சொல்வது? முராட்டும் தானியலும் இப்போது உயிரோடு இல்லை.
அக்பரது கண்கள்
கலங்கின. ஜஹாங்கீரை நினைத்துப் பார்த்தார். மனம் வேதனைப்பட ஆரம்பித்தது.
ஆம், அப்போது
ஜஹாங்கீர் கட்டுப்பாடுகளின்றித் திரிந்தார். யார் பேச்சையும் கேட்கவில்லை.
பெரியவர்களை மதிக்கவில்லை. அக்பருக்குக்கூட கட்டுப்படவில்லை. எல்லாம் இளமை தந்த
தைரியம்.
‘அரசே. அடுத்த அரசராக ஜஹாங்கீர் வேண்டாம். உங்கள் பேரன் ஷாஜகானை நியமியுங்கள்’ என்று அக்பருக்கு
நெருங்கிய அமைச்சர்கள் அவரிடமே வருத்தப்பட்டுச் சொல்லுமளவுக்கு ஆனது.
ஜஹாங்கீர் பற்றிய
கவலைகள் அக்பரது உடல்நிலையை மேலும் பாதித்தன. அதனோடு வயிற்றுப்போக்கும் சேர்ந்து
கொண்டது. ஒரு வாரம் படுக்கையை விட்டு எழவில்லை. இனி மருந்துகளால் பிரயோஜனமில்லை
என்று தெரிந்துவிட்டது.
ஜஹாங்கீருக்குத்
தகவல் போனது. அக்பரது அறைக்கு வந்தார் ஜஹாங்கீர். அக்பரது கண்கள் கலங்கின. சிறிது
நேரம் தன் தந்தைக்குப் பக்கத்தில் மரியாதையோடு நின்று கொண்டிருந்த ஜஹாங்கீர், கிளம்பிச்
சென்றார்.
78
அங்கிருந்தவர்களிடம்
ஹுமாயுனின் வாளையும், ராஜ தலைப்பாகையையும் எடுத்துவரும்படி சொன்னார்
அக்பர். கொண்டுவரப்பட்டன. அவற்றை ஜஹாங்கீரிடம் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
அக்பர், ஜஹாங்கீரைத்தான்
அடுத்த முகலாயப் பேரரசராக்க
விரும்புகிறார்
என்று மன் சிங் உணர்ந்து கொண்டார்.
அன்று இரவு.
அக்பரது கடைசி
ஆசைக்காக, தான்சேன்
பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில்
அந்த ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் அவர் உயிர் பிரிந்தது (அக்டோபர் 12, 1605). அவரது இறுதிச்
சடங்குகள் ஆக்ராவுக்கு அருகில் சிக்காந்தரா என்ற இடத்தில் செய்யப்பட்டன.
சில நாள்கள்
காலியாக இருந்த அக்பரது அரியணையில்
ஜஹாங்கீர் வந்து
அமர்ந்தார்.
No comments:
Post a Comment